நண்பனின் மனைவியுடன் ஜாலி ரெய்டு! பாய் பெஸ்டி மட்டுமில்லாமல் கூட 2 பேர் வேற! அரங்கேறிய கொடூரம்
மும்பை: மும்பையில் சீட்டு விளையாட அழைத்துச் செல்வதாக கூறி நண்பனின் மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் விலே பார்லேயில் 49 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். இவர் மும்பையில் இரண்டு இடங்களில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், இவருடைய குடும்ப நண்பரான லாலாசாகேப் சுக்நாத் அடிக்கடி இவரது வீட்டிற்கு வந்திருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளாக லாலாசாகேப் சுக்நாத்க்கும் இப்பெண்மணியின் கணவருக்கும் நல்ல நட்பு இருந்திருக்கிறது. எனவே இவர் குடும்ப நண்பராகிவிட்டார்.
இவ்வாறு இருக்கையில், கடந்த காலங்களில் இப்பெண்மணியுடன் லாலாசாகேப் சுக்நாத் நன்றாக பழகி வந்திருக்கிறார். இருவரும் சேர்ந்து சீட்டு விளையாடுவதற்காக வெளியில் செல்வார்கள். இதனை இப்பெண்மணியின் கணவரும் எதுவும் நினைத்துக்கொள்ளவில்லை. இது போல கடந்த 6ம் தேதியும் சீட்டு விளையாட வெளியே போகலாம் என்று லாலாசாகேப் சுக்நாத் அழைத்திருக்கிறார். இப்பெண்மணியும் எதுவும் நினைக்காமல் புறப்பட்டு சென்றிருக்கிறார்.

சந்தேகம்
ஆனால் காரில் ஏற்கெனவே இரண்டு பேர் இருந்திருக்கின்றனர். அப்போது இப்பெண்மணிக்கு லைட்டாக டவுட் வந்திருக்கிறது. இருப்பினும் அவர் பயணத்தை தொடர்ந்திருக்கிறார். இவர்கள் நால்வரும் சேர்ந்து அகமதாபாத் சென்றிருக்கிறார்கள். அங்கு சென்ற பின்னர் ஒரு பெரிய ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்கள். அதே ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அன்றிரவு அறைக்கு திரும்பிய பின்னர் லாலாசாகேப் சுக்நாத் அதிக அளவு மது அருந்தியுள்ளார். அதேபோல அப்பெண்மணிக்கும் மது கொடுக்கப்பட்டுள்ளது. அப்பெண்மணி நல்ல போதையான நிலையில், அவரிடம் லாலாசாகேப் சுக்நாத் மெதுவாக பேச்சு கொடுத்திருக்கிறார்.

பலாத்காரம்
கடந்த காலத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்களை காட்டி நெருங்க முயன்றிருக்கிறார். ஆனால், இதனை அப்பெண்மணி மறுத்த நிலையில், லாலாசாகேப் சுக்நாத் வலுக்கட்டாயமாக அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனை இவருடன் வந்த ஷஷாங்க் சஞ்சய் சாவந்த் மற்றும் மற்றொரு நபர் மறைவாக இருந்து வீடியோ எடுத்திருக்கின்றனர். பின்னர் அவர்களும் தங்களது ஆசைக்கு இணங்க அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அப்பெண் இணங்கவில்லை. இதனையடுத்து வீடியோவை காட்டி மிரட்டியுள்ளனர்.

புகார்
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருக்கிறார். பின்னர் மூவரும் சேர்ந்து அப்பெண்ணை பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனையடுத்து அதே காரில் 7ம் தேதி மும்பை வந்து சேர்ந்திருக்கின்றனர். வீட்டிற்கு வந்ததும் இது குறித்து தனது கணவரிடம் விவரத்தை கூற அவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளளனர். மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். இவர்கள் மூவர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் 376, 376 (d), (e) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வலியுறுத்தல்
கடந்த 25 ஆண்டுகளாக குடும்ப நண்பராக பழகிய நபரே கணவனுக்கு தெரியாமல் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மீதான பலாத்கார சம்பவங்கள் நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இக்குற்றத்தை குறைக்க பெண்கள் குறித்த சிந்தனையை ஆண்கள் மத்தியில் மாற்ற வேண்டும் என மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications