மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

205வது ஆண்டு விழா.. பீமா கோரேகானில் ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள்.. காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் பகுதியில் 205ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றிரவு முதல் ஏராளமானோர் இந்த நினைவு தூணுக்கு அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி திருவிழா போல களைக்கட்டியுள்ளது.

கடந்த 1818ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் அப்போதைய மராட்டிய மன்னருக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போர் மூண்டது. ஒருபுறம் மன்னர் ஆட்சியின் கீழ் மஹர் சமூகத்தினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் ஒதுக்கி வைத்திருக்க இவர்கள் அப்படியே ஆங்கிலேயர் பக்கம் நின்றனர். மறுபுறம் மன்னருக்கு ஆதரவாக பேஷ்வா சமூகத்தினர் களமிறங்க போர் தீவிரமானது. இந்த போரில் இறுதியாக ஆங்கிலேயர்கள் வெற்றிபெற்றனர்.

இதற்கு முக்கிய காரணம் இவர்களுடன் இருந்த மஹர் சமூக மக்கள்தான். எனவே இவர்களது வீரத்தை பாராட்டி ஆங்கிலேயர்கள் போர் நடைபெற்ற பீமா கோரேகான் எனும் பகுதியில் வீர தூண் ஒன்றை வைத்தனர். இதனையடுத்து ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதியன்று இந்த நினைவு தூண் அமைந்துள்ள பீமா கோரேகான் பகுதியில் 'விஜயஸ்தம்ப் ஷௌர்யா' தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். 1927ம் ஆண்டு சட்டமேதை டாக்டர் அம்பேத்கரும் இந்த நினைவு தூணுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 எல்கர் பரிஷத்

எல்கர் பரிஷத்

பின்னர் இந்த விழா மகாராஷ்டிரா முழுவதும் பரவியது. அண்டை மாநிலங்களிலிருந்து கூட இந்த விழாவில் பங்கேற்பதற்கு மக்கள் அதிக அளவில் வருகை தர தொடங்கினர். இப்படி கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பீமா கோரேகான் திருவிழாவில் பெரும் கலவரம் வெடித்தது. அரசு வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. இதில் பலர் படுகாயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். இந்த கலவரத்திற்கு 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அதாவது 2018ம் ஆண்டு பீமா கோரேகானில் கலவரம் நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்னர், 'எல்கர் பரிஷத்' எனும் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஜிக்னேஷ் மேவானி, பிரகாஷ் அம்பேத்கர் உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

 கலவரம்

கலவரம்

இந்த கலவரம் குறித்து வழக்குப்பதிவு செய்த புனே காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகையில் தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை எடுத்துக்கொண்டது. வழக்கு விசாரணையில் எல்கர் பரிஷத் கூட்டம்தான் இந்த கலவரத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. எனவே இதனை நடத்திய இடதுசாரிகள், அம்பேத்கரிய அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அப்படி கைதானவர்கள்தான், கௌதம் நவ்லகா, ஆனந்த் டெல்டும்ப்டே, ஹனி பாபு, ரமேஷ் காய்ச்சர், ஜோதி ஜக்டப், ஸ்டான் சுவாமி, மிலிந்த் டெல்ட்டும்ப்டே ஆகியோர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதில் ஸ்டான் ஸ்வாமி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் கூட வழங்கப்படாமல் காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார். இவர் லேப்டாப்பில் இருந்த ஆவணங்களைதான் புலனாய்வு அமைப்பினர் இவருக்கு எதிரான ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். ஆனால், தற்போது அமெரிக்காவை சேர்ந்த தடயவியல் நிறுவனமான அர்செனல் கன்சல்டிங் நிறுவனம், ஸ்டான் ஸ்வாமியின் சுவாமியின் லேப்டாப் ஹேக் செய்யப்பட்டு அதில் மாவோஸ்ட் அமைப்பினருடன் தொடர்புடையதை போன்ற ஆவணங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது.

 எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர்

ஆக இத்தனை சலசலப்புக்கு மத்தியிலும் பீமா கோரேகானில் விழாக்கொண்டாட்டம் நின்றபாடில்லை. ஒவ்வொரு ஆண்டும் இந்த தூணுக்கு அஞ்சலி செலுத்த வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 205வது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து நேற்றிரவு முதல் மக்கள் இந்த இடத்தில் ஒன்று சேர தொடங்கியுள்ளனர். காலை மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார் இங்கு வந்து தூணுக்கு அஞ்சலி செலுத்த இருக்கிறார். மேலும், அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், பிரகாஷ் அம்பேத்கர், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, எம்எல்ஏ ஜிதேந்திரா அவத் ஆகியோரும் இன்று வருகை தர இருக்கின்றனர். இதனால் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்த நிகழ்ச்சியையடுத்து பீமா கோரேகான் பகுதியை சுற்றியுள்ள ஷிக்ராபூர் மற்றும் லோனிகண்ட் ஆகிய பகுதிகளில் நேற்று முதல் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும் சுமார் 70 சமூக செயற்பாட்டாளர்கள் இந்த பகுதிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து அவதூறு பரப்பியதாக 4 பேருக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டை போல எவ்வித அசம்பாவித சம்பவமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக சுமார் 1,000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 250க்கும் அதிகமான சிசிடிவி கேமிராக்கள் விழாவில் பங்கேற்பவர்களை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

English summary
The 205th anniversary of Bhima Koregaon is being celebrated in Maharashtra. Since last night, a large number of people have been thronging the monument to pay their respects. As a result, the area has become like a festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X