மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பைக் கடல் பகுதியில் கவிழ்ந்த பயணிகள் படகு... மீட்புப் பணியில் கடலோர காவற்படை!

Google Oneindia Tamil News

மும்பை : மும்பை கடல் பகுதியில் பயணிகள் படகு ஒன்று இன்று பிற்பகலில் மூழ்கி விபத்திற்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. படகில் பயணித்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியாத நிலையில் கடலோர காவற்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

A passenger boat has capsized at Mumbai seashore

சிவாஜி ஸ்மராக் அருகே பயணிகள் படகு ஒன்று மூழ்கியுள்ளது. இந்தப் படகு மஹாராஷ்டிரா அரசுக்கு சொந்தமானது. மராட்டிய தலைமைச் செயலாளருடன் சென்ற இந்தப் படகு இன்று பிற்பகலில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள கடலோர காவற்படை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பில் ஒரு படகு சிவாஜி ஸ்மராக் அருகே மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ( நரிமன் பாயின்ட்டில் இருந்து 2.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த இடம்).

இந்த தகவல் கிடைத்ததையடுத்து 156 நிமிடங்களுக்குள்ளாக ஏசிவி எச் 192 அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலோர காவற்படையின் ஹோவர் கிராப்ட்டும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. மீட்புப்பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது, படகில் பயணித்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை, எனினும் பெரும்பாலானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று இந்திய கடலோர காவற்படையின் செய்தித் தொடர்பாளர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

English summary
A passenger boat has capsized near Shivaji Smarak, Sorces saying the Boat belongs to Maharashtra Government. Rescue operations underway
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X