பாஜக எதிர்ப்பு.. மும்பை மாநகராட்சியால் நீக்கப்பட்ட நடிகை வீடியோ.. மீண்டும் பதிவிட ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மும்பை: பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று நடிகை தியா மிர்சா வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவை பா.ஜ.க எதிர்ப்பு காரணமாக மும்பை மாநகராட்சி நீக்கிவிட்டது. இந்த விவகாத்தில் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்த மகாராஷ்டிரா உயர்நீதிமன்றம் தீபாவளி கொண்டாட்ட விழிப்புணர்வு வீடியோவை மீண்டும் பதிவிட மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக உருவாக்கக்கப்பட்ட ஒரு வீடியோவுக்கு இப்படிஒரு மதச்சாயம் பூசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் சிலரின் இத்தகைய 'குறுகிய மனப்பான்மை' எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லியை போலவே தீபாவளி பண்டிகையின் போது கோடிக்கணக்கான மக்கள் மும்பையில் பட்டாசு வெடிப்பார்கள். அப்படி பட்டாசு வெடிக்கும் போது, பசுமைப்பட்டாசுகளை தாண்டி சிலர் மாசுபடுத்தும் பட்டாசுகளையும் வெடிப்பார்கள். இதனால் சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.இந்த சூழலில் மும்பையில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து மும்பை மாநகராட்சி பொதுமக்களிடையே விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

firecracker Actress mumbai

அந்த வகையில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாலிவுட் நடிகை தியா மிர்சா வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை மும்பை மாநகராட்சி தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு பா.ஜ.க மும்பை தலைவர் அமித் சாட்டம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பா.ஜ.கவை சேர்ந்த மும்பை மேயர் ரிது தால்வியும், தியா மிர்சாவுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்தார். அத்துடன் இந்து பண்டிகைகள் மட்டுமே குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். இதனால் நடிகை தியா மிர்சாவின் விழிப்புணர்வு வீடியோவை மும்பை மாநகராட்சி தனது சமூகவலைதள பக்கத்தில் இருந்து நீக்கியது.

மதச்சாயம் பூசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது. பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் மும்பை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி, நீலா கோகலே விசாரணை நடத்தினர். அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள், மும்பை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள். மேலும் அவர்கள், "சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக உருவாக்கக்கப்பட்ட ஒரு வீடியோவுக்கு இப்படிஒரு மதச்சாயம் பூசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் சிலரின் இத்தகைய 'குறுகிய மனப்பான்மை' எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. சுற்றுச்சூழல் என்பது அனைவருக்கும் பொதுவானது. எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அனைவரும் ஒரே காற்றைத்தான் சுவாசிக்கிறோம்.

தீபாவளி பண்டிகைக்கு எதிரானது அல்ல

விழிப்புணர்வு ஏற்படுத்த எந்த பிரபலத்தை தேர்வு செய்யவேண்டும் என்பது மும்பை மாநகராட்சி கமிஷனரின் உரிமை. அதை யாரும் கேள்வி கேட்கமுடியாது. பொது பதவிகளில் இருப்பவர்களிடம் இருந்து இத்தகைய கருத்துக்களை எதிர்பார்க்கவில்லை. எங்கள் உத்தரவு தீபாவளி பண்டிகைக்கு மட்டுமே எதிரானது அல்ல. திருமணம், ஊர்வலங்கள், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் மற்றும் கிரிக்கெட் போட்டிகளுக்கு பிறகு என அனைத்து நேரங்களிலும் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. எனவே பட்டாசு வெடிப்பது தொடர்பான நீதிமன்ற கட்டுப்பாடுகள் ஆண்டின் 365 நாட்களுக்கும் பொருந்தும். சுற்றுச்சூழல் பாதுகாப்பே எங்கள் முக்கிய நோக்கம். மதச்சார்பற்ற கொள்கையை மக்கள் வளர்க்கவேண்டும்" என்று நீதிபதிகள் கூறினார்கள்.

மீண்டும் பதிவிட உத்தரவு

அத்துடன் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பால் நீக்கப்பட்ட நடிகை தியா மிர்சாவின் விழிப்புணர்வு வீடியோவை உடனடியாக மீண்டும் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று மும்பை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


பட்னாவிஸ் காட்டம்

இதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "வீடியோவை நீக்கியது மும்பை மாநகராட்சியின் விருப்பத்துக்கு உட்பட்டது. இது ஒரு சின்ன பிரச்சனை. இந்த விவகாரத்தில் மும்பை மாநகராட்சியை உயர்நீதிமன்றம் கண்டிக்கவில்லை. தியா மிர்சா ஒரு நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால் அவர் நாட்டின் மிக முக்கியமான தலைவர் அல்ல. என் மட்டத்திலான கேள்விகளை என்னிடம் கேளுங்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+