ஒன்றல்ல.. 20 முறை வந்த மெசேஜ்.. அதிர்ந்த நக்மா.. செல்போனை ஹேக் செய்த கும்பல் யார்?
எந்தத் தகவலையும் பகிரவில்லை, இருந்தாலும் நடிகை நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்திருக்கிறார்கள்.
மும்பை: எந்தத் தகவலையும் பகிரவில்லை, இருந்தாலும் நடிகை நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்திருக்கிறார்கள். நக்மா செய்த ஒரே தவறு கேஒய்சி என்று அனுப்பிய லிங்க்கை கிளிக் செய்ததுதான். அந்த லிங்கை கிளிக் செய்த உடனே பணத்தை பறித்திருக்கிறார்கள். என்ன நடந்தது விவரமாக பார்க்கலாம்.
இப்போதெல்லாம் கே ஓய்சி விவரம் என்ற ஒரு லிங்கை அனுப்பி மொத்தமாக வங்கி கணக்கை துடைத்துவிட்டு அனுப்பிவிடுகிறார்கள் டெக்னிக்கல் திருடர்கள் . எப்புட்றா பாணியில் பல்வேறு புதிய மோசடிகளில் புதிய முறையில் அரங்கேற்றி வருகிறார்கள் டெக்னிக்கல் திருடர்கள்.
வங்கியில் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் , ஆதார் எண்ணை அப்டேட் செய்ய வேண்டும், பான் கார்டை இணைக்க வேண்டும், உங்கள் மொபைல் எண் தவறுதலாக உள்ளது அப்டேட் செய்ய வேண்டும், உங்களுக்கு லைப்டைம் கிரெடிட் கார்டு வந்துள்ளது, உங்களுக்கு லட்சக்கணக்கில் பரிசு விழுந்துள்ளது, உங்களுக்கு 10 லட்சம் மாத சம்பளம் வேலை ரெடியாகிவிட்டது, வெளிநாட்டில் வேலை காலியாக உள்ளது, உங்கள் பெயரில் பார்சல் வந்திருக்கிறது என பல வழிகளில் வங்கி கணக்கை காலி செய்ய லிங்குகள் அனுப்பப்படுகின்றன. அதை தொட்டால், தொட்ட அத்தனை பேரின் வங்கி கணக்குகளும் சில நிமிடங்கள் துடைத்து எடுக்கப்படுகின்றன.

பணத்தை எடுக்கிறார்கள்
முன்புதான் ஓடிபி வேண்டும், ஒடிபி இருந்தால் தான் ஒருவரின் பணத்தை எடுக்க முடியும் , இப்போது அப்படி இல்லை உங்களது யுபிஐ ஐடி அல்லது உங்கள் போனிற்கு அனுப்பப்படும் ஒரு லிங்க் போதும் மொத்தமாக உங்கள் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்துவிடுவார்கள். கால் சென்டர்கள் அமைத்து நூதனமாக பேசி பல்வேறு வழிமுறை உருவாக்கி திருடுபவர்கள் திருடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் திருடர்களின் புதிய வழிமுறைகளை போலீசார் வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் டெக்னிக்கல் திருட்டை தடுக்க முடியவில்லை என்பதே கசப்பான உண்மை. சரி விஷயத்துக்கு வருவோம்.

ஒரு லட்சம்
நடிகர் ரஜினியுடன் பாட்சா படத்தில் நடித்தவர் நடிகை நக்மா (வயது 48).இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர். அவர் ஒரு லட்சம் ரூபாயை ஆன்லைன் மோசடியாளர்களிடம் இழந்திருக்கிறார். இது தொடர்பாக நக்மா போலீசில் அளித்த புகாரில், " என் மொபைல் போனுக்கு, உங்க வங்கி கணக்கின் கே.ஒய்.சி விவரங்களை அப்டேட் செய்யவேண்டும்' என்ற தகவலுடன் ஒரு குறுஞ்செய்தி லிங்க் வந்தது. நான் அந்த லிங்க்கை க்ளிக் செய்தபோது, எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும், எப்படி கே.ஒய்.சி விவரங்களை அப்டேட் செய்யவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதாகவும் கூறினார்.

ஒன்டைம் பாஸ்வேர்டு
அந்த மோசடி பேர்வழி எனது போனை அவனது கட்டுப்பாட்டில் எடுத்து, எனது இன்டர்நெட் பேங்கிங் கணக்கை திறந்து... அதிலிருந்து 99,998 ரூபாயை வேறு ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குக்கு மாற்றிவிட்டான். அந்த நபரிடம் நான் எந்த விவரத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை. அப்படி இருந்தும் என்னுடைய பணம் பறிபோய்விட்டது. எனது போனுக்கு 20-க்கும் மேற்பட்ட ஒன் டைம் பாஸ்வேர்டுகள் வந்தன. அதன் மூலம் எனது வங்கிக் கணக்கிலிருந்து அதிக அளவில் பணம் எடுக்க முயன்றனர். அதிர்ஷ்டவசமாக அவர்களால் அதிக அளவில் பணம் எடுக்க முடியவில்லை" இவ்வாறு நக்மா கூறியிருந்தார்.

ஒற்றை பேங்க்
இதனிடையே மும்பையில் மட்டும் கடந்த சில நாட்களில் பல லட்சம் ரூபாய் 80 பேரின் வங்கி கணக்கில் இந்த முறையில் மோசடி நடந்துள்ளது. மோசடியால் பாதிக்கப்பட்ட 80 பேரில் நக்மாவும் ஒருவர். கிட்டத்தட்ட அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்கள் ஆவர். ஆனால் எந்த வங்கி என்பதை போலீசார் வெளியிடவில்லை. மும்பை போலீசார் இந்த மோசடி குறித்து எச்சரித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications