Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகேஷ் அம்பானி வீட்டு மருமகளாகும் ராதிகா மெர்ச்சன்ட்.. யார் இவர்? சுவாரஸ்ய தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியை திருமணம் செய்து கொள்ளும் ராதிகா மெர்ச்சன்ட் யார் இவர்? இவருடைய பின்னணி என்ன?

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரராக உள்ளவர் முகேஷ் அம்பானி. இன்டர்நேஷனல் கோடீஸ்வரர்களுக்கு இணையாக இவர் வளர்ந்து வருகிறார். ஆசியாவில் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரர் இவர் ஆவார்.

இவருடை ய மனைவி நீடா அம்பானி. இவர்களுக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற மகன்களும் ஈஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். ஆகாஷும் ஈஷாவும் இரட்டை பிறவிகள். இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்கள் அண்டிலியா வீட்டில் வசித்து வருகிறார்கள்.

அம்பானிக்கு திருமண ஏற்பாடுகள்

அம்பானிக்கு திருமண ஏற்பாடுகள்

ஆனந்த் அம்பானிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவரை திருமணம் செய்து கொள்பவரும் மிகப் பெரிய தொழிலதிபரின் மகள்தான். அவர் ஆங்கர் ஹெல்த்கேர் தலைமைச் செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ஆவார். இந்த நிலையில் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்தது.

பாலிவுட் நட்சத்திரங்கள்

பாலிவுட் நட்சத்திரங்கள்

இந்த விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாரம்பரிய சடங்குகளுடன் இந்த நிச்சயதார்த்த விழா சிறப்பாக நடந்தது. வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கு மாமியார் நீடா அம்பானி ஆரத்தி எடுத்து வரவேற்றார். பின்னர் தனது சொந்த பந்தங்களுக்கு மருமகளை அறிமுகம் செய்து வைத்தார்.

ராதிகா மெர்ச்சன்ட்

ராதிகா மெர்ச்சன்ட்

குஜராத் மாநிலம் கட்ச் நகரை சேர்ந்தவர் ராதிகா மெர்ச்சன்ட். இவர் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்தான். இந்த நகரில்தான் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். மேற்படிப்பிற்காக நியூயார்க் சென்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

சமூக பணிகள்

சமூக பணிகள்

இதையடுத்து மும்பைக்கு சென்று அங்கு தொழில் உத்தி ஆலோசகராக பயிற்சி பெற்றார். தேசாய் மற்றும் தேவாஞ்சி மற்றும் இந்தியா ஃபர்ஸ்ட் ஆகிய நிறுவனங்களை நிர்வகிக்க தொடங்கினார். மேலும் தனது குடும்பத்தின் தொழில் தொடர்பான விஷயங்களிலும் பங்களிப்பை செலுத்தி வருகிறார். இவருக்கு சமூக பணிகளிலும் ஆர்வம் அதிகம். தொழில்துறையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைந்தவர்.

விலையுயர்ந்த கார்கள்

விலையுயர்ந்த கார்கள்

இவருக்கு சொந்தமாக விலையுயர்ந்த கார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ராதிகா மெர்ச்சன்டின் தந்தை விரேன் மெர்ச்சன்ட் மிகப் பெரிய தொழிலதிபர். ஆங்கர் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் என பல தொழில் நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவரது மனைவி ஷைலா மெர்ச்சன்ட்டும் ஒரு தொழிலதிபர்தான். இவர்களுக்கு அஞ்சலி மெர்ச்சன்ட் என்ற மகளும் இருக்கிறார்.

 பரதநாட்டிய கலைஞர்

பரதநாட்டிய கலைஞர்

ராதிகா மெர்ச்சன்ட் ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட! அவர் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு தற்போது 28 வயதாகிறது. ராதிகா மெர்ச்சன்ட்டின் தந்தை விரேன் மெர்ச்சன்ட் இந்தியாவில் பணக்காரர்களுள் ஒருவர். இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ 755 கோடியாகும். ராதிகா மெர்ச்சன்டுக்கும் ஆனந்த் அம்பானிக்கும் வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+