• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"தம் கட்டி".. ஒரே தூக்கு..."நானா இதை செஞ்சேன்".. ஆத்தாடி அனுஷ்கா!

By Varuni
Google Oneindia Tamil News

மும்பை: பாலிவுட் நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவின் இன்ஸ்டா வீடியோ மற்றும் போஸ்ட் வைரலாகி வருகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா பாலிவுட் நடிகையும் இயக்குநருமாவார். இவர் இப்போது ஒரு கலகலப்பான வீடியோவைப் போட்டுள்ளார்.

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.

அறிமுகப்படுத்திய அனுஷ்கா

அறிமுகப்படுத்திய அனுஷ்கா

கடந்த ஜனவரி மாதம் ஒரு அழகான பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள் விராட் கோலியும் அனுஷ்காவும். தங்கள் குழந்தைக்கு வாமிகா என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். சமீபத்தில் கணவர் விராட் கோலியுடன் தானும் தன் குழந்தையும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன்னுடைய குழந்தை வாமிகாவை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

மகிழ்ச்சியான தருணம்

மகிழ்ச்சியான தருணம்

அனுஷ்கா பதிவிட்ட புகைப்படத்தில் அவர் குழந்தையை கையில் ஏந்தியபடி தன் கணவருக்கு அருகில் நின்றபடி உள்ளார். மேலும் இந்தப் புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவில் "நங்கள் அன்பையும், நன்றியுணர்வையும் வாழ்கை முறையாக வாழ்ந்து வந்தோம். ஆனால் இந்த சிறிய வாமிகா எங்களை முழு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளாள்".

உணர்வுக் கலவை

உணர்வுக் கலவை

"கண்ணீர், சிரிப்பு, கவலை, பேரின்பம் போன்ற உணர்வுகளை சில நேரங்களில் உணர்ந்ததாகவும், தூக்கத்தை இழந்தாலும் இதயம் நிறைந்த அன்போடு உள்ளோம். உங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் வேலைக்கு

மீண்டும் வேலைக்கு

அனுஷ்கா தற்போது தனது மகப்பேறு ஓய்விலிருந்து மீண்டும் தனது வேலைக்கு திரும்பியுள்ளார். தனது க்ரீன் ரூமில் தான் நடிக்கும் படத்தில் அடுத்த காட்சிக்கு தயாராவதற்காக அவருடைய உதவியாளர்கள் அவருக்கு சிகையலங்காரம் செய்கின்றனர். ஆனால் அனுஷ்கா தான் நடிக்கும் படத்தை பற்றியோ அல்லது இந்த புகைப்படத்தைப் பற்றியோ எதுவும் பதிவிடவில்லை.

நகைச்சுவையயான வீடியோ

நகைச்சுவையயான வீடியோ

தற்போது அனுஷ்கா ஒரு நகைச்சுவையான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் தனது கணவர் விராட் கோலியை பின்பக்கமாக இருந்து அப்படியே தூக்க முயற்சித்து அலேக்காக தூக்கியும் விடுகிறார். இதனால் இருவருமே ஆச்சர்யம் அடைகின்றனர். அனுஷ்காவுக்கே இதை நம்ப முடியவில்லை. நான் தான் இததை செஞ்சேனா என்று நம்பமுடியாமல் கேட்கிறார்.

மீண்டும் ஒரு தூக்கு

மீண்டும் ஒரு தூக்கு

அதனால் மறுபடியும் கோலியை தூக்க முயற்சிக்கிறார்.அதற்கு முன்பாக கோலியிடம் தனக்கு அவர் உதவ கூடாது என்றும் தானே தனியாக தூக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார். அதற்கு கோலியும் சம்மதிக்க மறுபடியும் முயற்சித்து கோலியை தூக்கிவிடுகிறார். இந்த வீடியோவிற்கு தலைப்பாக இதை நான் தான் செஞ்சேனா என்று பதிவிட்டுள்ளார்.

இரண்டு படங்கள்

இரண்டு படங்கள்

அனுஷ்கா தற்போது இரண்டு படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இயக்குனர் நவ்தீப் சிங்கின் "கனேடா" என்ற படத்திலும் கிரிக்கெட் வீரர் ஜுலான் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு முன் கிடைசியாக 2018 ஆம் ஆண்டு ஷாருக்கான் மற்றும் கத்ரீனாவுடன் "ஜீ" என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Anushkaas lovely attempt of lifting Kohli
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X