Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி.. வெளிவந்த உண்மை.. பரபரப்பு தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடலோரத்தில்ஒரு சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதைப் பொருள் விருந்து நடந்தது. பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களின் குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற போதை தடுப்பு பிரிவு போலீஸார் கப்பலில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

ஷாருக்கானின் மகன் கைது

ஷாருக்கானின் மகன் கைது

அப்போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான், முக்கிய புள்ளிகள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். வாட்ஸ்ஆப் சேட் அடிப்படையில் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டுளளதாகவும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்ககள் வெளிவந்தன.

நீதிமன்ற காவல்

நீதிமன்ற காவல்

முதலில் ஆர்யான் கானை அக்டோபர் 7-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வாட்ஸ்அப் சாட் விபரங்கள், ஆரியன் கானிற்கு போதைப் பொருள் தொடர்பு இருப்பதை தெளிவாக காட்டுகிறது என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் கூறியது. இதனை தொடர்ந்து ஆர்யான் கான் உள்பட 8 பேரை அக்டோபர் 11 வரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று அனுமதி கோரியது. ஆனால் இதற்கு அனுமதி மறுத்த நீதிமன்றம் ஆர்யான் கான் உள்பட 8 பேரை 14 நாள் நீதிமன்ற காவலிலில் அனுப்பியது.

ஜாமீன் மனு தள்ளுபடி

ஜாமீன் மனு தள்ளுபடி

ஆர்யான் கான் தனது வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே மூலம் ஜாமீன் கோரி விண்ணப்பித்து இருந்தார். இதேபோல் கைதான மற்றவர்களும் தனித்தனியாக ஜாமீன் கோரி விண்ணப்பித்து இருந்தனர். நேற்று இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம் ஆர்யான் கான் உள்ளிட்ட 10 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

ஒப்புக்கொண்டார்

ஒப்புக்கொண்டார்

இந்த நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஆர்யன்கான் ஒப்புக் கொண்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஆர்யான் கான் நண்பரான அர்பாஸ் மெர்சண்ட்டிடம் இருந்து 6 கிராம் போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினார்கள். நண்பரிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியதாகவும், சொகுசு கப்பலில் பயன்படுத்த திட்டமிட்டு இருந்ததாகவும் அவர் கூறியதாக என்.சி.பி தெரிவித்துளளது/

என்சிபி மறுப்பு

என்சிபி மறுப்பு

இந்த நிலையில் போதைப்பொருள் சோதனை வழக்கு அரசியல் தொடர்புடையது, மதம் தொடர்புடையது என்ற குற்றச்சாட்டுகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மறுத்துள்ளது. இது தொடர்பாக மும்பை மண்டல என்சிபி இயக்குனர் சமீர் வான்கடே கூறுகையில், இது முற்றிலும் ஆதாரமற்றது. நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் மதத்தையும் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையை தொழில் ரீதியாக செய்கிறோம்' என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+