தரமற்ற உணவு வினியோகம்.. மேலாளர் கன்னத்தில் 'பளார்' விட்ட சிவசேனா எம்எல்ஏ.. தீயாய் பரவும் வீடியோ!
மும்பை: ஏக்நாத் ஷிண்டேவின் அணியைச் சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏவான சந்தோஷ் பங்கர், 'தொழிலாளிகளுக்கு தரமற்ற உணவை வழங்கியதற்காக கேட்டரிங் சர்வீஸ் மேனேஜரை கன்னத்தில் பளார் விடும் காட்சி'' தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹங்கோலி மாவட்டத்தில் தொழிலாளிகளுக்காக மதிய உணவு திட்டம் முறையில் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இந்த உணவு மிகவும் தரமற்றதாக இருப்பதாக அடிக்கடி புகார் வந்ததுள்ளது.

தரமற்ற உணவு
இந்த நிலையில், தரமற்ற முறையில் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படும் விவகாரம் அந்த தொகுதியின் சிவசேனா எம்.எல்.ஏவான சந்தோஷ் பங்கருக்கு தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக எம்.எல்.ஏ சந்தோஷ் பங்கர் குறிப்பிட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் அங்கு அந்த தொழிலாளிகளுக்கு ஒப்பந்த முறையில் உணவு வழங்கி வந்த கேட்டரிங் சர்வீஸ் மேனேஜரிடம் 'ஏன் தொழிலாளர்களுக்கு தரமற்ற வகையில் உணவுகளை தயார் செய்கின்றனர்' என்று கேட்டுள்ளார்.

கன்னத்தில் பளார் விட்ட எம்.எல்.ஏ
மேலும் சந்தோஷ் பங்கர் ஒப்பந்த மேலாளரிடம் அந்த சீட்டை காண்பித்து அடுக்டுக்கான கேள்விகளை கேட்கிறார். அப்போது இதற்கு விளக்கம் அளிக்க வந்த மேலாளரை சந்தோஷ் பங்கர் கன்னத்தில் அறைந்தார். எனினும் அந்த மேலாளர் எதுவும் பேசாமல் அப்படியே மவுனமாக இருக்கிறார். இதத்தொடர்ந்து சந்தோஷ் பங்கர் அங்கிருந்து கிளம்பி செல்கிறார். சந்தோஷ் பங்கர் ஒப்பந்த மேலாளரை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

நெட்டிசன்கள் கருத்து
இதற்கிடையே சிவசேனா எம்.எல்.ஏ. சந்தோஷ் பாங்கர், வேண்டும் என்றே தான், உள்நோக்கத்துடன் ஒப்பந்த மேனேஜரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், சந்தோஷ் பங்கருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு எம் எல் ஏ வாக அவர் செய்தது சரி என்றாலும், அவரை கன்னத்தில் அறைந்தது தவரு என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் இவ்வாறு தரமற்ற உணவுகளை வினியோகம் செய்பவர்களை கன்னத்தில் அறைந்ததோடு விடாமல், சிறையில் அடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

யார் இந்த சந்தோஷ் பங்கர்
சிவசேனாவின் ஏக்னாத் ஷிண்டே அணியில் இருப்பவர் தான் இந்த சந்தோஷ் பங்கர் எம்.எல்.ஏ. சிவசேனா-பாஜனதா கூட்டணியின் போது ஹங்கோலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து உத்தவ் தாக்கரேயின் தீவிர ஆதரவாளராக இருந்த சந்தோஷ் பங்கர், சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தின் போது ஏக்னாத் ஷிண்டே அணிக்கு மாறியது குறிப்பிடத்தக்கது. இன்று காலையில் சிவசேனாவின் ஏக்னாத் ஷிண்டே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ. பிரகாஷ் சுர்வே, தங்களை யாரும் மிரட்டினால் கை, கால்களை அடித்து உடைங்க.. நான் உங்கள பெயில்ல எடுக்கிறேன் என்று கூறி சர்ச்சையை கிளப்பிய நிலையில், மற்றொரு சம்பவமாக இது பரவி வருவது ஏக்னாத் ஷிண்டேவுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications