லோக்கல் டிரெயினில் 'பாக்சிங்'.. தலை முடியை இழுத்து அடித்து குத்துவிட்ட பெண்கள்.. ஷாக் வீடியோ!
மும்பை: மும்பை மின்சார ரயிலில், 3 பெண் பயணிகள் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்துக்கொள்ளும் காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மும்பை, சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு புறநகர் ரயில் நகரவாசிகளின் பயணத்திற்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.
பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவ மாணவிகளுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் புறநகர் ரயில் சேவை மிகவும் பயன்படுவதாகவே உள்ளது.

மும்பை மின்சார ரயில் சேவை
மும்பையை எடுத்துகொண்டால் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயனம் மேற்கொள்கின்றனர். எப்போது பார்த்தாலும் மும்பை மின்சார ரயில்களில் கூட்டம் இருந்துகொண்டே தான் இருக்கும். குறிப்பாக அங்குள்ள ரயில் நிலைய பிளாட்பாரங்கள் கூட தெரியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். மும்பை நகரில் மட்டும் மின்சார ரெயில்களில் நாள்தோறும் சுமார் 80 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இதில் 25 சதவிகிதம் பேர் பெண்கள் தான்.

பெண் பயணிகள் பெட்டியில் கூட்டம்
பெண் பயணிகளுக்காக புறநகர் ரயில்களில் தனி பெட்டியும் உண்டு. பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி இத்தகைய பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். எனினும் கட்டுக்கடங்காத கூட்டம் இருப்பதால் பெண் பயணிகளுக்கு போதிய இருக்கைகள் மின்சார ரயில்களில் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. பீக் நேரம் என்று சொல்லப்பட்டும் காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் சென்று திரும்புவதற்கு அவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இப்படி ரயில்களில் பெண் பயணிகள் படும் அவதிகளின் இடையே சில சண்டை சச்சரவுகளும் நடக்கின்றன.

பயங்கர மோதல்
அந்த வகையில் மும்பையில் பெண்களுக்கான ஸ்பெஷல் மின்சார ரயிலிலும் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது. இதில் பயணித்த 3 பெண்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பெண் பயணிகள் 3 பேரும் தலைமுடியை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு ஒருவருக்கொருவர் பயங்கராமாக மோதிக்கொள்கின்றன. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சீட் இருக்கைக்காகவா?
அந்த வீடியோவில், 3 பெண்கள் ஒருவருக்கொருவர் பயங்கரமாக தாக்கி கொள்கின்றனர். ஒருவரை ஒருவர் திட்டியும்.. தலைமுடியை பிடித்து இழுத்தும்.. முகத்தில் குத்து விட்டும் தாக்கிக்கொள்வது போல் வீடியோவில் பதிவாகியுள்ளது. இருக்கைக்காக அவர்கள் சண்டையிட்டு கொண்டனரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று தெரியவில்லை.. இதேபோல் சண்டையிட்டு கொண்ட பெண்கள் உறவினர்களா? அல்லது முன் பின் தெரியாதவர்களா? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

கூடுதல் பெட்டிகள் இணைத்தால்
எனினும் ஓடும் மின்சார ரயிலில் பெண்கள் இப்படி பயங்கரமாக தாக்கிக்கொள்ளும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும் பலரும் பெண் பயணிகள் பெட்டியில் இவ்வளவு கூட்டம் இருந்தால் நிச்சம் சண்டை வரத்தான் செய்யும் என்று பதிவிட்டு வருகின்றனர். பெண் பயணிகளுக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டால் இது போன்ற சம்பவங்களை குறைக்கலாம் எனவும் ஒருசிலர் பதிவிட்டுள்ளனர்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications