உலகம் முழுவதும் மிக வீரியமாக பரவும் கொரோனா..ஒரே நாளில் 8,11,018 பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8,11,018 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 8,93,022 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.
மும்பை: உலக மக்கள் கொரோனாவில் இருந்து படிப்படியாக மீண்டு வருகின்றனர். ஒரே நாளில் 8,93,022 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒரே நாளில் 8,11,018 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது நிம்மதியைத் தருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் மொத்தம் 56,93,89,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 54,06,26,617 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 63,91,331 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 39,775 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 57 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேகமாக பரவும் கொரோனா
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. கொரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 8,11,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 56,9,389,671பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 8,93,022 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 54,06,26,617 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் மரணம்
கொரோனாவால் உலகம் முழுவதும் 1,569 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 63,91,331 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 71,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 91,525,478 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 10,49,671 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் வீரியமாக பரவல்
பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 58,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 3,33,98,040 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில் முழுவதும் மொத்தம் 6,75,929 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 1,34,188 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல இத்தாலியிலும் நாட்டிலும் கொரோனாவால் 1,20,683 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா ஒழியவில்லை
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நூறு கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். எனினும் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. கொரோனா எப்போது ஒழியும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. எனவே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் அவசியம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications