முடிவுக்கு வராத கொரோனா..உலகம் முழுவதும் 58 கோடி பேரை தொட்டது.. ஜப்பானில் படு தீவிர பரவல்
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 8,25,931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 8,52,086 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 58 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் படு தீவிரமாக பரவி வருகிறது.

சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 58 கோடி மக்களை தனது கோர நாக்கினால் தொட்டுள்ளது கொரோனா.
உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. கொரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் மொத்தம் 58,03,19,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 55,03,88,926 பேர் மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் 42,293 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் உலகம் முழுவதும் பேர் ஒரே நாளில் 1,878 உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 64,17,064 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 90,701 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,30,45,824 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 10,54,997 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 42,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 3,37,95,192 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில் முழுவதும் மொத்தம் 6,78,375 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 45,515 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல இத்தாலியிலும் நாட்டிலும் கொரோனாவால் 54,088 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் கொரியாவில் ஒரே நாளில் 85,275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பான் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,30,055 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 1,21,18,112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,04,80,392 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் 32,286 பேர் நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர்.
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா எப்போது ஒழியும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. எனவே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் அவசியம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications