தினம் ரூ.3 கோடி செலவு செஞ்சாலும் முகேஷ் அம்பானியின் சொத்து காலியாக இத்தனை ஆண்டு ஆகுமா? அடேங்கப்பா
மும்பை: முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அவருடைய சொத்து குறித்தும், ஒரு நாளைக்கு ரூ.3 கோடி என அவர் செலவு செய்தால், எத்தனை ஆண்டுகளுக்கு அவர் சேர்த்து வைத்திருக்கும் பணம் தாக்குபிடிக்கும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10.21 லட்சம் கோடியாக இருக்கிறது. இந்நிலையில் இவர் ஒரு நாளைக்கு ரூ.3 கோடி என செலவழித்தால் அவருடைய சொத்த எத்தனை ஆண்டுகளில் காலியாகும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதாவது முகேஷ் அம்பானி தினமும் ரூ.3 கோடியை செலவு செய்தால், 3,40,379 நாட்களில் முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் தீர்ந்துவிடும். இந்த கணக்கை ஆண்டுகளாக மாற்றினால், முகேஷ் அம்பானி ஒரு வேலையும் செய்யாமல் தினமும் ரூ.3 கோடியை செலவு செய்தால், அவரது சொத்துக்கள் தீர 932 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் ஆகும். இன்னும் சரியாக சொல்வதெனில் முகேஷ் அம்பானியின் 12 தலைமுறைகள் ஒரு வேலையும் செய்யாமல் தினமும் ரூ.3 செலவு செய்யலாம் என தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.
முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆக்ஸ்பாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது,
கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை மற்றும் இந்தியாவில் நிகழ்ந்திருக்கக்கூடிய பொருளாதார மாற்றங்கள் குறித்து Survival of the Richest: The India story எனும் ஆய்வை 'ஆக்ஸ்பாம் இந்தியா' நடத்தியிருந்தது. இந்த ஆய்வின் முடிவில், கொரோனா காலகட்டத்திலிருந்து தற்போது வரை இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு 121% அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது என்று ஆக்ஸ்பாம் கூறியிருந்தது.
மேலம் ஆய்வில் கூறப்பட்டிருந்ததாவது, "நாட்டில் உள்ள ஒட்டுமொத்த செல்வங்களில் வெறும் 3 சதவிகிதத்தை 50 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் வைத்திருக்கின்றனர். இந்தியாவில் 2020ம் ஆண்டு பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 102ஆக இருந்தது. இது 2022ம் ஆண்டு 166ஆக அதிகரித்திருந்தது. இந்த பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரு நாளைக்கு ரூ.3,608 கோடி என்கிற விகிதத்தில் உயர்ந்திருக்கிறது.
அதாவது 2021ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவின் வெறும் 5 சதவிகிதம் பேர் நாட்டில் உள்ள சொத்துக்களில் 62%க்கும் அதிகமானதை கொண்டிருக்கிறார்கள். இந்த 5 சதவிகிதம் பேரில் முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.54.12 கோடியாகும். இந்த தொகையை கொண்டு நாடு முழுவதும் 18 மாதங்களுக்கு பட்ஜெட் போடலாம். அதேபோல இந்த பெரும் பணக்காரர்களுக்கு 2 சதவிகிதம் சொத்துவரி விதித்தால் ரூ.40,423 கோடி நிதியை உருவாக்க முடியும். இந்த நிதியை கொண்டு நாடு முழுவதும் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சரியான, சத்தான உணவை மூன்று வருடங்களுக்கு கொடுக்க முடியும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர்












Click it and Unblock the Notifications