திராவிடத்தால் தப்பித்தோம்! மகாராஷ்டிராவில் இன்றும் தொடரும் தேவதாசி முறை.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவில் தேவதாசி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படும் நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் இந்த முறை தொடர்ந்து வருவது அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிய வருகிறது.

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது வரை தேவதாசி முறை நீடித்து வருவதாக டிவிட்டரில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த பழமைவாதம் நீடித்து வருவது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தேவதாசி முறை

தேவதாசி முறை

இந்தியாவில் தேவதாசி முறை பழங்காலத்திலிருந்து நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தஞ்சை பெரிய கோயிலுக்கு 400 பெண்களை தேவதாசியாக நியமித்து அவர்களுக்கான குடியிருப்புகளையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளார். 11 வயது நிரம்பிய பெண் பிள்ளைகளை கோயிலுக்கு அர்ப்பணிக்கும் முறையை தேவதாசி என்று சொல்வதுண்டு. 'பொட்டுக்கட்டுதல்' முறையின் மூலம் அவர்கள் கோயிலுக்கு அர்ப்பணிக்கப்படுவார்கள்.

மகாராஷ்டிராவில்

மகாராஷ்டிராவில்

கடவுளை திருமணம் செய்துகொண்டு வாழ்நாள் முழுவதும் தீர்க சுமங்கலியாக அவர்கள் வாழ்ந்து வருவார்கள். இவ்வாறு இருக்கையில் தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே இந்த முறைக்கு கடும் எதிர்ப்புகள் மேலெழுந்தன. ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் தற்போதும் இந்த தேவதாசி முறை சட்டத்திற்கு புறம்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டிவிட்டரில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோயில் ஒன்றில் கடைப்பிடிக்கப்படும் தேவதாசி முறையை இந்த வீடியோ அம்பலப்படுத்தியுள்ளது.

சிறுமி

சிறுமி

புனே மாவட்டத்தில் உள்ள ஜிஜூரி கிராமத்தில் உள்ள கோயிலில் இந்த முறை தற்போதும் வழக்கத்தில் இருக்கிறது. இவ்வாறு தேவதாசியாக இருக்கும் பெண்கள் கோயில்களில் மட்டுமல்லாது பொதுவெளியிலும் நடனமாடி வருகின்றனர். இவர்கள் பள்ளி செல்வதற்கோ அல்லது திருமணம் செய்துகொள்வதற்கோ அனுமதிக்கப்படவில்லை. இந்த பெண்கள் குழுவில் 13 வயது சிறுமி ஒருவரும் இடம் பெற்றிருக்கிறார். தனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து கோயிலில்தான் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகம்

சர்வதேச ஊடகம்

'Video Volunteers' எனும் சர்வதேச ஊடக நிறுவனம் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடுவதற்கு அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. சிறுமி 'Video Volunteers' ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில், இவ்வாறு நடனம் ஆடுவதற்கு ரூ.1,500 வரை பெறுவதாக கூறியுள்ளார். ஒருவேளை நீங்கள் பள்ளி சென்றிருந்தால் என்னவாக ஆக வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள் என்கிற கேள்விக்கு அந்த சிறுமி சிரித்துக்கொண்டே மழலை மொழியில், "நர்ஸ் அல்லது டாக்டராக ஆகியிருப்பேன்" என்று கூறியுள்ளார்.

ஒப்பீடு

ஒப்பீடு

அதேபோல வயதான தேவதாசிகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என்றும் கோயிலில் உள்ள இதர தேவதாசிகள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது டிவிட்டரில் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு முன்னர் 1930களிலேயே தேவதாசி முறையை எதிர்த்து நீதிக்கட்சி ஆட்சியில் தந்தை பெரியாரின் ஆலோசனை பேரில் அப்போது எம்எல்ஏவாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி மசோதாவை கொண்டு வந்தார் என்கிற தகவலையும் ஒப்பிட்டு விவாதித்து வருகின்றனர். மேலும் திராவிடம் என்ன செய்தது என்று கேட்பவர்கள் இதை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+