Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழிதீர்த்த பட்னாவிஸ்.. வெறும் 4 நாட்களில் கைவிட்டுப்போன அரியணை.. அன்று என்சிபி.. இன்று சிவசேனா!

Subscribe to Oneindia Tamil

மும்பை : 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிரா முதல்வராக என்சிபியின் அஜித் பவார் ஆதரவுடன் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ், இன்று சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே உதவியுடன் துணை முதல்வராக மகாராஷ்டிரா அரசில் இணைந்துள்ளார்.

2019ஆம் ஆண்டில் நிலவிய மகாராஷ்டிரா அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் திடீரென அஜித் பவார் ஆதரவுடன் முதல்வராகப் பதவியேற்றார் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ். பாஜகவுக்கு எதிராக சிவசேனா - என்சிபி - காங்கிரஸ் கட்சிகள் திரண்டதால் 4 நாட்களிலேயே ஆட்சி பறிபோனது.

இந்நிலையில் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் அதற்கு பழிதீர்த்துள்ளார் பட்னாவிஸ். ஆளுங்கட்சியான சிவசேனாவில் இருந்தே எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து 'அதிருப்தி சிவசேனா' ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இன்று துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார் தேவேந்திர பட்னாவிஸ்.

அரசியல்

அரசியல்

அரசியலில் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், அதிகாரத்தைக் கைப்பற்ற யாரும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் போகக்கூடும் என்பது மகாராஷ்டிர அரசியலைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை. கடந்த 3 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் ரோலர் கோஸ்டர் பயணம் போல. அன்று அதிகாரத்தில் ஏறியவர்கள் அப்படியே இன்று சறுக்கியிருக்கிறார்கள். அன்று சறுக்கியவர்கள் இன்று அம்மாநில அரசியலையே மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

2019 தேர்தலில்

2019 தேர்தலில்

கடந்த 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததை அடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்கும் முயற்சியில் இறங்கியது. யாரும் எதிர்பாராத சூழலில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு

இதையடுத்து பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சநீதிமன்றம், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது உத்தரவு பிறப்பித்தது.

பதவி விலகிய பட்னாவிஸ்

பதவி விலகிய பட்னாவிஸ்

இதற்கிடையே தங்களது மெஜாரிட்டியை காட்டுவதற்காக சிவசேனா, காங்கிரஸ், என்சிபி ஆகிய 3 கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏக்கள் மும்பையிலுள்ள ஓட்டலில் ஒன்று கூடி அணிவகுப்பு நடத்தினர். தங்களுக்கு ஆதரவு இல்லாத நிலையில், அஜித் பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது அண்ணன் சரத் பவாரோடு இணக்கமானார். அதைத்தொடர்ந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும் பதவி விலகுவதாக அறிவித்தார். வெறும் 4 நாட்கள் மட்டுமே இந்த காலகட்டத்தில் முதல்வராகப் பதவி வகித்தார் உத்தவ் தாக்கரே.

உத்தவ் தாக்கரே அரசு

உத்தவ் தாக்கரே அரசு

இதையடுத்து, சிவசேனா தலைமையில் சிவசேனா - என்சிபி, காங்கிரஸ் சேர்ந்து ஆட்சி அமைந்தது. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். துணை முதல்வராக என்சிபியின் அஜித் பவார் பதவியேற்றார். ஆளுநர் உத்தரவை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தனது பெரும்பான்மையை நிரூபித்தார். பாஜகவின் பட்னாவிஸ் முதல்வரான 4 நாட்களில் அவர் பதவி விலக நேரிட்ட சூழலில் இன்று அதற்கு பழிதீர்த்துக் கொண்டுள்ளார் பட்னாவிஸ்.

 ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே

சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், 39 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உத்தவ் தாக்கரேவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினர். தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநருக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

துணை முதல்வராக பட்னாவிஸ்

துணை முதல்வராக பட்னாவிஸ்

பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கினர். பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் திடீர் திருப்பமாக இன்று, ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர். 2019ல் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் 4 நாட்களில் ஆட்சியை இழந்த பட்னாவிஸ் இன்று மாஸ்டர் பிளான் போட்டு, அதே சிவசேனாவின் ஆதரவோடு துணை முதல்வராக அரியணை ஏறியுள்ளார். அரசியல்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+