சொகுசு கப்பலில் படு சீக்ரெட்டான ரேவ் பார்ட்டி.. மாறு வேடத்தில் புகுந்த போலீஸ்.. நடந்தது என்ன?
மும்பை: மும்பை கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரேவ் பார்ட்டியை போதை பொருள் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
கோவாவைச் சேர்ந்த கார்டீலியா க்ரூஸ் என்ற கப்பலில் போதை பொருள் புழங்கும் ரேவ் பார்ட்டி நடப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த பார்ட்டி குறித்த தகவல்கள் இந்த பிரிவு போலீஸாருக்கு இரு வாரங்களுக்கு முன்பே கிடைத்துவிட்டதாக தெரிகிறது. அதன்படி மும்பை கடலோரத்தில் நின்று கொண்டிருந்த இந்த கப்பலில் நிகழ்ந்த நிகழ்ச்சி குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பல்
கோவாவை சேர்ந்த இந்த கப்பலில் அக்டோபர் 2, 3, 4 ஆகிய 3 நாட்களுக்கு இந்த பார்ட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். இந்த நிகழ்வை டெல்லியை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்த முற்பட்டதாக தெரிகிறது. மும்பையிலிருந்து கோவாவுக்கு சனிக்கிழமை இரவு இந்த கப்பல் புறப்பட்டு , இந்தக் கப்பலில் 3 நாட்களும் பார்ட்டி நடத்தப்பட்டு பின்னர் மும்பைக்கு திங்கள்கிழமை இந்த கப்பல் திரும்பி வரும் என்பதுதான் பார்ட்டியின் திட்டம் என கூறப்படுகிறது.

பணக்கார இளைஞர்கள்
இந்த 3 நாட்களும் கப்பலில் பணக்கார இளைஞர்கள், பெண்கள் நிர்வாணமாக நடனம் ஆடுவது, போதை பொருளை பயன்படுத்துவது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் நடந்து கொள்வர். போதை பொருள் புழக்கம் என்பது பாலிவுட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்துள்ள நிலையில் இந்த பார்ட்டி குறித்து போதை தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தகவல் கிடைத்துள்ளது.

பயணிகள் போல் டிக்கெட்
இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குநர் சமீர் வாங்கடே தலைமையிலான குழுவினர் இந்த கப்பலில் சனிக்கிழமை இரவு பயணிகள் போல் மாறுவேடத்தில் பயணிக்க டிக்கெட் பெற்று கப்பலில் ஏறினார். அப்போது அங்கிருந்த சக பயணிகள் கோகைன், எக்ஸ்டேசி, எம்டிஎம்ஏ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டனர்.

தேடுதல் வேட்டை
உடனே அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தியதில் அங்கிருந்த பயணிகளின் ஆடைகள், உள்ளாடைகள், பர்ஸ்கள், ஹேண்ட் பேக்களில் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையின் பேரில் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை தங்கள் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications