தெரு நாயை பலாத்காரம் செய்த போதை ஆசாமி.. ரத்தம் சொட்ட சொட்ட நாய் மருத்துவமனையில் அனுமதி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் தெருநாயுடன் ஒருவர் செக்ஸ் வைத்த கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், 40 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஹுட்கேஷ்வர் பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திர பகத். இவரது சொந்த ஊர் மத்திய பிரதேசமாகும். வேலைக்காக மகாராஷ்டிரா வந்த நிலையில் இங்கே நீண்ட நாட்களாக தங்கியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது இவர் இருக்கும் ஏரியாவில் தெருநாய் ஒன்று இருந்திருக்கிறது.

புகார்
இந்ந தெருநாயை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வீடியோ காட்சி காவல்துறையினரின் கவனத்திற்கு வந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஹுட்கேஷ்வர் நகர் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "எங்களுக்கு தெருநாய்களை பராமரிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமிருந்து புகார் ஒன்று வந்தது. அதாவது தெரு நாய் ஒன்றை அடையாளம் தெரியாத நபர் பாலியல் பலாத்காரம் செய்வதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றும் கொடுக்கப்பட்டது.

வீடியோ
வீடியோவில் இந்த சம்பவம் உண்மை என்பது நிரூபணமாகி இருந்தது. எனவே நாங்கள் இந்த வீடியோவில் இருந்த நபரை தேடினோம். அப்போதுதான் இவர் தேவேந்திர பகத் என்பது எங்களுக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்திருக்கிறது. புகார் கொடுத்த நபர் பாதிக்கப்பட்ட நாயை அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார். நாய்க்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. சம்பவம் காவல் நிலையத்திற்கு சற்று தள்ளி இருந்த பூங்காவில் நடந்திருக்கிறது. அப்போது அங்கு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்தான் இந்த வீடியோவை எடுத்துள்ளனர். இதனையடுத்து தேவேந்திர பகத்தை நாங்கள் கைது செய்தோம். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

விசாரணை
இவருக்கு ஏற்கெனவே திருமணமாகியுள்ளது. இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கூலி வேலை செய்வதற்காக அவர் இங்கு தங்கி இருக்கிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. போதையில்தான் இந்த காரியத்தை செய்திருக்கிறார். இவருக்கு ஒருநாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இவரை ஒரு நாள் சிறையில் அடைத்திருக்கிறோம். இதேபோல வேறு ஏதேனும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரித்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.

மனநல சிகிச்சை
புகார் கொடுத்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி கூறுகையில், "இவரின் நடத்தை ஒரு தேர்ந்த குற்றவாளியை போன்றே இருக்கிறது. எனவே இவர் மீது எங்களுக்கு மேலும் சந்தேகம் இருக்கிறது. இவரால் நிச்சயம் பல நாய்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்களை போன்றவர்கள்தான் அப்பாவி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். அதனை மறைக்க கொலையும் செய்கிறார்கள். எனவே இவரை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். தெரு நாயை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications