மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்சிஜன் பற்றாக்குறை: மகாராஷ்டிராவுக்கு விரைந்த‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்.. தட்டுப்பாடு தீருமா?

Google Oneindia Tamil News

மும்பை: திரவ மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றிய முதல் 'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்' ரயில் நேற்று இரவு விசாகப்பட்டினத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு புறப்பட்டது.

Recommended Video

    காலில் விழுகிறோம்…ஆக்சிஜன் கொடுங்க… அதிர வைத்த சுகாதாரத்துறை அமைச்சர்!

    இந்தியா முழுவதும் அடங்காமல் திரியும் கொரோனாவால் நாடு மிகவும் அபாய கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.

    நாட்டில் பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இடமில்லை. இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாதா அளவுக்கு கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.

     '3' அளவுகோல்.. அதில் மூணாவது 'பகீர்' ரகம்.. மாநிலங்களை 'அலர்ட்' ஆக்கும் கொரோனா தடுப்பூசி 'அலாட்' '3' அளவுகோல்.. அதில் மூணாவது 'பகீர்' ரகம்.. மாநிலங்களை 'அலர்ட்' ஆக்கும் கொரோனா தடுப்பூசி 'அலாட்'

    மகாராஷ்டிரா நிலைமை படுமோசம்

    மகாராஷ்டிரா நிலைமை படுமோசம்

    இது தவிர இடி மேல் இடியாக கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ரெம்சிடிசிவர் தடுப்பு மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் மத்திய அரசும், மாநில அரசுகளும் கையை பிசைந்து நிற்கின்றன. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலைமை கையை விட்டு போகும் அளவுக்கு மிக மிக மோசமாக உள்ளது.

    நோயாளிகள் உயிரிழப்பு

    நோயாளிகள் உயிரிழப்பு

    அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி விட்டதால் சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான நோயாளிகள் மருத்துவமனைகள் வெளியே காத்து கிடக்கின்றனர். ஒவ்வொரு மருத்துவமனையிலும் முன்பை விட தற்போது பல மடங்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆக்சிஜன் கிடைக்காமல் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

    ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்

    ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்

    நாடு முழுவதும் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டு பற்றாக்குறை நிலவும் இடங்களுக்கு சப்ளை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றிய முதல் 'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்' ரயில் நேற்று இரவு விசாகப்பட்டினத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு புறப்பட்டது.

    பியூஸ் கோயல் உறுதி

    பியூஸ் கோயல் உறுதி

    சுமார் ஏழு டேங்கர்களில் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், '' திரவ மருத்துவ ஆக்ஸிஜன் டேங்கர்கள் ஏற்றப்பட்ட முதல் 'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்' ரயில் மகாராஷ்டிராவுக்கு புறப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதன் மூலமும், அனைத்து குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ரயில்வே தொடர்ந்து கடினமான காலங்களில் தேசத்திற்கு சேவை செய்கிறது "என்று பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

    English summary
    The first ‘Oxygen Express’ train loaded with liquid medical oxygen departed from Visakhapatnam to Maharashtra last night
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X