மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையில் பதற்றம்.. மகாராஷ்டிராவுடன் சீன வாகன உற்பத்தி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Google Oneindia Tamil News

மும்பை: எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியாவில் வாகன உற்பத்தி தொழிலில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய மகாராஷ்டிரா அரசுடன் சீன நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

லடாக் எல்லையில் கடந்த சில நாட்களாக சீனா, இந்தியா ஆகிய நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனால் கடந்த இரு மாதங்களாக இரு நாடுகளுக்கிடையே பொருளாதார நல்லுறவுகளும் சரியாக இல்லை. இந்த நிலையில் லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்தினரை கல்வீசி தாக்கியதில் 3 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

லடாக்.. மாநில முதல்வர்கள் மீட்டிங்கில் திடீரென கலந்து கொண்ட ராஜ்நாத் சிங்.. மோடியுடன் தீவிர ஆலோசனை!லடாக்.. மாநில முதல்வர்கள் மீட்டிங்கில் திடீரென கலந்து கொண்ட ராஜ்நாத் சிங்.. மோடியுடன் தீவிர ஆலோசனை!

உற்பத்தி

உற்பத்தி

இந்த நிலையில் இந்தியாவில் தொழில் தொடங்க சீன நிறுவனமான கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது. சீனாவின் எஸ்யூவி ரக கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் கிரேட் வால் மோட்டார்ஸ்.

வாகன உற்பத்தி

வாகன உற்பத்தி

இந்த நிறுவனம் மும்பையில் தாலேகானில் வாகன உற்பத்தி தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் முதல்வர் உத்தவ் தாக்கரே, நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் யாங், சீனாவுக்கான இந்திய தூதர் உள்ளிட்டோர் முன்னிலையில் கையெழுத்தானது.

பாதிப்பு

பாதிப்பு

1 பில்லியன் டாலரை முதலீடு செய்வதாக கிரேட் வால் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. தற்போது தாலேகானில் உள்ள ஆலை மூலம் 3000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர முடியும். இதன் மூலம் இந்தியா- சீனா இடையே பதற்றமான சூழல் நிலவினாலும், தொழில் தொடங்கும் திட்டங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிகிறது.

ஆலை

ஆலை

2020 இல் பிப்ரவரி மாதம் நடந்த வாகன கண்காட்சி இந்த நிறுவனத்தின் புதிய எஸ்யூவி ரக கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஹவால் எஸ்யூவி ரக கார் அடுத்த ஆண்டு சந்தைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. தாலேகானில் உள்ள தொழிற்பூங்காவில் 300 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை ஏற்படுத்தப்படவுள்ளது.

நிறுவனங்கள்

நிறுவனங்கள்

புனேவிலிருந்து 45 கி.மீ. தூரமும் மும்பை துறைமுகத்திலிருந்து 100 கி.மீ. தூரமும் கொண்டது. இந்த நிறுவனம் 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைமை நிறுவனம் ஹூபேய் மாகாணத்தில் உள்ளது. உலகமெங்கும் 70 நிறுவனங்களை கொண்டது.

English summary
Great wall Motors Company announces the signing of a MoU with Maharastra Government with 1 billion dollar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X