அடங்காத கொரோனா.. உலக நாடுகளில் அதிகரிப்பு.. மொத்தம் 57.45 கோடி பேர் பாதிப்பு
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினமும் அதிகரித்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 57,45,47,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஜப்பானில் 1,96,297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வூகானில் 2019ல் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. அங்கிருந்து பல நாடுகளும் இந்த வைரஸ் பரவியது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் பெரும் பாதிப்பை சந்தித்தது.
கொரோனா பாதிப்புக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. 3 அலைகளாக கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கி ஏரளாமானவர்களை கொன்று குவித்துள்ளது.

2019ல் பரவ துவங்கிய கொரோனா
இதனால் இந்தியா உள்பட உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்த துவங்கியது. மேலும் கொரோனா தடுப்பூசி ஆய்வுகளும் துவங்கியது. இதையடுத்து தான் கொரோனா பாதிப்பு குறைய துவங்கியது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தாக்க துவங்கியது. கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை.

முடிவு பெறாத கொரோனா
இதற்கிடையே தான் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் என்பது குறைந்துள்ளது. இருப்பினும் முடிவு பெறவில்லை.

24 மணிநேர பாதிப்பு
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனாவால் 9 லட்சத்து 89 ஆயிரத்து 766 பேர் பாதிக்கப்பட்டுள்னளர். இதனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 574,547,238 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பலியானது 6,402,368 என்ற அளவில் உள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 544,209,753 பேர் மீண்டுள்ளனர்.
Recommended Video

எந்த நாட்டில் அதிகம்?
கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தமட்டில் உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு ஜப்பானில் அதிகமாக பதிவாகி உள்ளது. ஜப்பானில் ஒரு நாளில் மட்டும் 1,96,297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா மரணங்களை பொறுத்தமட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பிரேசிலில் 153 பேர் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications