மும்பை ஹோட்டலில்... சுயேச்சை எம்.பி.யின் உடல் கண்டெடுப்பு... போலீசார் தீவிர விசாரணை
மும்பை: தாத்ரா & நாகர் ஹவேலி பகுதியின் சுயேச்சை எம்.பி. மோகன் எஸ். டெல்கர் உடல் மும்பையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாத்ரா & நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் மோகன் எஸ். டெல்கர். இவர் தாத்ரா & நாகர் ஹவேலி தொகுதியில் இருந்து ஏழு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகினார்.

அதன் பின், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தாத்ரா - நாகர் ஹவேலி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் அதைத்தொடர்ந்து பாரதிய நவசக்தி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கிய அவர், அக்கட்சியின் தலைவராகவும் இருந்தார்.
இந்நிலையில், 58 வயதான மோகன் டெல்கரின் உடல் மும்பையிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த அறையில் இருந்து தற்கொலை கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். மோகன் டெல்கரின் உடல் தற்போது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருவதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications