நியூசிலாந்து டி20 தொடருக்கான அணி அறிவிப்பு: கேப்டன் ரோகித் சர்மா! கோலி அவுட்.. வீரர்கள் லிஸ்ட் இதோ
மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
இந்த தொடரில் ஆட உள்ள அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. அதேநேரம், விராட் கோலி அணியில் இடம் பெறவில்லை.
டி20 தொடருக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து, உலக கோப்பை தொடருடன் விலக உள்ளதாக விராட் அறிவித்திருந்தார். அதன்படி, நமீபியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டிதான், அவர் டி20 தொடரில் கேப்டனாக விளையாடிய கடைசி போட்டியாகும்.

அடுத்த கேப்டன்
இதையடுத்து இந்திய அணிக்கு யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்தது. நேற்று விராட் கோலி தனது பேச்சின்போது, அடுத்த கேப்டன், ரோகித் சர்மாதான் என்பதை சூசகமாக அறிவித்தார். இன்று பிசிசிஐ அறிவிப்பு அதை உறுதி செய்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்
வரும் 14ம் தேதியுடன், 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் முடிவடைய உள்ள நிலையில், நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டி வரும் 17ம் தேதி ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி 19ம் தேதி ராஞ்சியிலும் கடைசி மற்றும் இறுதி போட்டி 21ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.

ரோகித் சர்மா கேப்டன்
நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்பது முக்கிய அறிவிப்பாகும்.

அணி விவரம்
கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம் பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், சஹல், ஆர்.அஸ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது. சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இளம் படை
நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே அரையிறுதிக்கு கூட தகுதி பெறவில்லை. இந்த நிலையில்தான் புதிதாக இளம் தலைமுறை கொண்ட ஒரு சிறப்பான அணியை உருவாக்க வேண்டிய பொறுப்பு புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா கைகளுக்கு வந்துள்ளது. அதற்கேற்ப இளம் வீரர்கள் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்க இருக்கிறது.
-
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications