அவுரங்கசீப் கல்லறை- பற்றி எரிந்த நாக்பூர்..காரணமே 'ஷாவா' சினிமாதான்.. கொந்தளித்த முதல்வர் பட்னாவிஸ்!
மும்பை: முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை விவகாரத்தில் நாக்பூரில் வன்முறை வெடித்து வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; இந்த பதற்றத்துக்கு காரணமே சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சாம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஷாவா சினிமாதான்; அதில்தான் அவுரங்கசீப்பின் கொடூரங்கள் இடம்பெற்றுள்ளதால் மராத்திய மக்கள் கொந்தளித்து போயுள்ளனர் என்று மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் குல்தாபாத்தில் அவுரங்கசீப் கல்லறை இருக்கிறது; இந்த கல்லறைக்கு தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். ஷாவா திரைப்படம் குறித்து மகாராஷ்டிரா சட்டசபையில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் அபு ஆஸ்மி, அவுரங்கசீப்பை நல்லவர் என புகழ்ந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த அவுரங்கசீப்பின் கல்லறை, சிவாஜியின் மண்ணில் இருப்பது அவமானம்; அடிமைத்தனத்தின் சின்னம் என்பதால் அதனை அகற்றியாக வேண்டும் என மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும்; இடித்து தள்ளியாக வேண்டும் என்ற குரல்கள் வலுத்தும் வருகின்றன.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாக்பூரில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தின் போது அவுரங்கசீப் கொடும்பாவி எரிக்கப்பட்டது. ஆனால் இஸ்லாமியர்களின் புனித நூலாக குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் நாக்பூரில் மிகப் பெரும் வன்முறை வெடித்தது. இதனையடுத்து நாக்பூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சம்பாஜியின் வரலாற்றை விவரிக்கும் ஷாவா திரைப்படம் மராத்தியர்களிடையேயான அவுரங்கசீப்புக்கு எதிராக கோபத்தை அதிகரிக்க செய்துள்ளது; சிவாஜியும் மகனை சித்திரவதை செய்து கொலை செய்த அவுரங்கசீப் கல்லறை எப்படி மராத்திய மண்ணில் இருக்கலாம்? என்பதுதாம் அவர்களது ஆதங்கம். நாக்பூரில் வதந்தி பரப்பிவிடப்பட்டதால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன; போலீசாரையும் திட்டமிட்டே தாக்கி உள்லனர். போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அமைதி திரும்புகிறது.
சிவாஜி- சம்பாஜி- அவுரங்கசீப்
மராத்திய மன்னர் சிவாஜியின் மூத்த மகன் சம்பாஜி. சிவாஜி- சம்பாஜி- அவுரங்கசீப் தொடர்பான தரவுகள், பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. சிவாஜியின் இளைய மகன் ராஜாராமை சிறைபிடித்து மன்னரானவர் சம்பாஜி. அவரது ஆட்சியில் 9 ஆண்டுகள் முகலாயர்களுடன் யுத்தம் நடந்தது. இந்த யுத்தத்தின் முடிவில் சம்பாஜி சிறை பிடிக்கப்பட்டு அவுரங்கசீப்பால் சித்திரவதை செய்யப்பட்டார்; இதனைத்தான் தற்போது வெளியான ஷாவா திரைப்படம் விவரிக்கிறது. இதனால்தான் அவுரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்கின்றனர் மராத்தியர்கள்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications