பால் தாக்கரேவின் பெருமையை தக்க வைத்த உத்தவ் அணி.. மஹிமா தொகுதியில் அமித் தாக்ரேவுக்கு 3வது இடம்
மும்பை: பால் தாக்ரேவின் சிவசோனாகவாக இருந்தாலும் சரி, அவரது மருமகனான ராஜ் தாக்ரேவின் எம்என்எஸ் கட்சியாக இருந்தாலும் சரி இரண்டுக்கும் மஹிமா தொகுதி மிக முக்கியமானதாகும். எனவே இந்த தொகுதியில் யார் வெற்றி கொடி நாட்டப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. தற்போது தேர்தல் முடிவுகள் வந்திருக்கும் நிலையில், உத்தவ் அணி வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல இவரை எதிர்த்து களம் இறக்கப்பட்ட அமித் தாக்ரே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
மகாராஷ்டிராவின் அரசியல் அடையாளமாக கருதப்படும் பால் தாக்கரே, தனது சிவசேனாவை 1966ம் ஆண்டு மஹிமாவில் வைத்துதான் தொடங்கினார். அங்குள்ள சிவாஜி பார்க்கில் பேரணி பொதுக்கூட்டம் நடத்தி சிவசேனாவை தொடங்கி வைத்தார். இப்படியாக சிவசேனாவுக்கு இந்த தொகுதி மிகவும் முக்கியமானதாகும். இப்போது சிவசேனா கட்சி உத்தவ் அணி, ஷிண்டே அணி என பிரிந்து இருந்தாலும், மஹிமா தொகுதியை கைப்பற்ற இரு கட்சிகளுக்கு இடையேயும் போட்டி நிலவி வருகிறது.

இந்த போட்டியில் மூன்றாவதாக உள்ள அணி ராஜ் தாக்ரேவின் என்எம்எஸ் கட்சி. அதாவது பால் தாக்கரே சிவசேனாவை தொடங்கிய சிவாஜி பார்க் பகுதியில், சரியாக 40 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது மருமகன் ராஜ் தாக்கரே தனது என்எம்எஸ் கட்சியை தொடங்கினார். ஆக என்எம்எஸ் கட்சிக்கும் சிவாஜி பார்க் அமைந்துள்ள மஹிமா தொகுதி முக்கியமானதாகும். எனவே, இந்த தொகுதியில் வெற்றி பெற்று யார் பால் தாக்ரேவின் பாரம்பரியத்தை காப்பாற்ற போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
வேட்பாளர்களை பொறுத்தவரை என்எம்எஸ் கட்சி சார்பில் ராஜ் தாக்ரேவின் மகன் அமித் தாக்கரே களமிறங்கி இருந்தார். மாகயுதி கூட்டணி சார்பில் பாஜகவின் சதா சார்வார்க்கர் என்பவரும், மகா விகாஸ் அகாடியின் உத்தவ் அணி சார்பில் மகேஷ் ஸ்வாந்த் களமிறக்கப்பட்டார். கடந்த தேர்தல்களை வைத்து பார்க்கும்போது இந்த முறை பாஜகவின் சதா சார்வார்க்கருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டது. ஏனெனில் மஹிமா தொகுதியில் கடைசி 3 தேர்தல்களில் 2 முறை இவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆனால் கள யதார்த்தம் வேறு மாதிரியாக இருந்தது. அதாவது இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து உத்தவ் அணியின் வேட்பாளர் மகேஷ் ஸ்வாந்த் முன்னிலையில் இருந்து வந்தார். தற்போதைய நிலவரப்படி மகேஷ் 1316 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து களமிறங்கிய ஷிண்டே சிவசேனாவின் வேட்பாளர் இரண்டாவது இடத்திலும், எம்என்எஸ் கட்சியின் அமித் தாக்ரே 17151 வாக்குகள் குறைவாக பெற்று மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications