பிரேக்கில் கால் வைக்க மறந்த பெண்.. 300 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்.. பறிபோன உயிர்! ஷாக் வீடியோ
மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மலைப் பகுதியில் கார் ஓட்டி கற்றுக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் ரிவர்ஸ் கியர் போட்டு காரை இயக்கிய போது எதிர்பாராத விதமாக கார் பள்ளத்தாக்கில் பாய்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இது தொடர்பான பகீர் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மகாராஷ்டிராவில் குன்று ஒன்றின் மீது இருந்து காரை பின்னோக்கி நகர்த்திய போது திடீரென அந்த கார் 300 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இதில் காரை ஓட்டிய இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை அந்தப் பெண்ணின் நண்பர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அந்த பெண் அப்போது தான் கார் ஓட்ட கற்றுக் கொண்டு இருந்துள்ளார். அதை அவரது நண்பர் வீடியோவாக எடுத்து வந்துள்ளார். இந்தச் சூழலில் தான் குன்றின் மீது ஏறி வீடியோ எடுக்கும் போது அந்த கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. இது தொடர்பான பகீர் வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது..
பகீர்: இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் நடந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த பெண் 23 வயதான ஸ்வேதா தீபக் சர்வாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் காரை ஓட்டிய நிலையில், அவரது நண்பர் சூரஜ் சஞ்சாவ் முலே அதை வீடியோவாக எடுத்துள்ளார். இருவரும் ஔரங்காபாத்தில் இருந்து சுலிபஞ்சன் ஹில்ஸ் சென்றுள்ளனர். அங்கு தான் இந்த விபத்து நடந்துள்ளது.
என்ன நடந்தது: நேற்று பகல் 2 மணியளவில் ஸ்வேதா காரை மெல்ல பின்னோக்கி நகர்த்தி இருக்கிறார். அவர் காரை பின்னோக்கி நகர்த்தத் தொடங்கிய போது குன்றில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் தான் கார் இருந்திருக்கிறது. இருப்பினும், அவர் ஆக்சிலேட்டரை அழுத்த காரின் வேகம் அதிகரித்துள்ளது.
வெளியே இருக்கும் அவரது நண்பர் மெதுவாக போகும்படியம் எச்சரிக்கிறார்.. அவர் கிளட்ச் பிடிக்கச் சொல்லிக் கத்துவது தெளிவாகக் கேட்கிறது. மேலும், ஸ்வேதாவுக்கு உதவ ஓடிச் செல்கிறார். ஆனால், அதற்குள் கார் பள்ளத்தாக்கில் பாய்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி இருக்கிறது.
बापरे! मागे रिव्हर्स घेत ती #reel शूट करत होती, कार दरीत कोसळली अन् क्षणात होत्याचं नव्हतं झालं. छत्रपती #संभाजीनगर मधील घटना#accident #sambhajinagar #caraccident pic.twitter.com/rn0cSfMyPd
— फटका-Fatka (@MahaFatka) June 17, 2024
பறிபோன உயிர்: அந்த கார் சுமார் 300 அடி உயரக் குன்றில் இருந்து கீழே உருண்டு பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. பள்ளத்தாக்கில் கார் சிதிலமடைந்து கிடக்கும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. நண்பர்களான அவர்கள் அங்கு சுலிபஞ்சனில் உள்ள தத்தாத்ரேயர் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது தான் இந்த விபத்து அரங்கேறியுள்ளது.
இந்த பகுதியில் மழைக் காலங்களில் நிலவும் அழகிய இயற்கைக் காட்சிகளை ரசிக்க அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அப்படி இவர்கள் வந்த போது தான் இந்த விபத்து அரங்கேறியுள்ளது
எச்சரிக்கை: பொதுவாக கார் ஒட்ட கற்றுக்கொள்வோர் ஆள் இல்லாத மைதானங்களில் தான் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்து லேசான டிராபிக் இருக்கும் சாலைகளில் பயிற்சியாளருடன் ஓட்ட வேண்டும். இதுபோன்ற மலைப் பகுதிகள் என்பது அனுபவம் வாய்ந்தவர்களுக்கே சவாலாக இருக்கும். கார் ஓட்ட கற்றுக் கொள்வோர் நிச்சயம் இதுபோன்ற இடங்களில் கார் ஓட்டக் கூடாது என்பதைக் காட்டுவதாகவே இந்தச் சம்பவம் இருக்கிறது.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications