மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் மீண்டும் கன மழை.. கடலில் ராட்சத அலைகள்.. ரயில் சேவை பாதிப்பு.. மக்களுக்கு ரெட் அலர்ட்

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை மற்றும் அதை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை இலாகாவின் எச்சரிக்கையை தொடர்ந்து, மும்பையின் குடிமை அமைப்பான ப்ருஹன் மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) தெற்கு மற்றும் மத்திய மும்பையில் உள்ள பள்ளிகளில் நிவாரண முகாம்களை திறந்துள்ளது.

Mumbai affected due to rain and flood

அரபுக் கடலில் அதிக உயரத்திற்கு அலை வீசியதாலும், பிற்பகலில் பெய்த மழையினாலும், ரயில் தண்டவாளங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன்.. வேலூர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஆவேசமான ஸ்டாலின் நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கிறேன்.. வேலூர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஆவேசமான ஸ்டாலின்

இதனால் குர்லா, சியோன் மற்றும் சுன்னாபாத்தி பிரிவு நோக்கி நீர் பின்னோக்கி தண்ணீர் சென்றது. குர்லா-சியோன் நிலையங்களுக்கிடையிலான புறநகர் ரயில் சேவையின் முக்கிய பிரிவு மற்றும் துறைமுக பிரிவிலுள்ள, குர்லா மற்றும் சுன்னாபாத்தி இடையே புறநகர் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்களில் இருந்து, வெளியேற விரும்பும் பயணிகளுக்காக, நவி மும்பையில் வடாலா சாலை மற்றும் வாஷி இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாலை 4 மணியளவில், வடலாவிலிருந்து 12 பேருந்துகள் வாஷிக்கு புறப்பட்டிருந்தன.

அதேநேரம், விரார் மற்றும் சர்ச்ச்கேட் இடையேயான மேற்கு பாதையில் புறநகர் ரயில்கள் பெரிய தாமதமின்றி இயக்கப்படுகின்றன.

மும்பையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் மற்றும் தானே, பால்கர் மற்றும் நவி மும்பையில் உள்ள மக்கள் தினமும் புறநகர் ரயில்களில் பயணம் செய்வதால், ரயில்களை ரத்து செய்வதால் ஏற்படும் தாக்கம் அதிகமாக உள்ளது. மத்திய ரயில்வேயின் லேட்டஸ்ட் தகவல்களின்படி, தாதர் நிலையத்திலிருந்து மாலை 5.20 மணியளவில் ஒரு ரயில் கல்யாண் புறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3 ம் தேதி மதியம் 1 மணி முதல் அடுத்த 24 மணிநேரங்களுக்கு மிக அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் கடல் பகுதிக்கு அருகே வருவதையும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மும்பை, தானே மற்றும் நவி மும்பையில், அடுத்த 24-36 மணி நேரத்தில் தீவிர மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி துணை இயக்குநர் ஜெனரல் கே எஸ் ஹொசலிகர் ட்வீட் செய்துள்ளார்.

"நான்கு பருவமழை மாதங்களிலேயே, மிக உயர்ந்த அலை இன்று பிற்பகலில் அரபிக் கடலில் தென்பட்டது. அதன் உயரம் 4.90 மீட்டர் ஆகும். மும்பையில் கடுமையான மழை பெய்யும் என்று கணித்துள்ள இந்த காலகட்டத்தில் உயரமான அலைகளும் தாக்க தொடங்கியுள்ளது, சரியான நிலை கிடையாது. தயவுசெய்து மக்கள், வெளியே செல்வதைத் தவிர்க்கவும்."என்று அவர் மற்றொரு ட்வீட்டில் கூறியுள்ளார்.

English summary
Mumbai and its suburbs have been raining since early morning. The Indian Meteorological Department has warned of heavy rains over the next 48 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X