மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. அப்படி போடு.. என்னவொரு புத்திசாலித்தனம்! 2 ரூமுக்கு ஒரே ஏசி!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை 2 அறைக்கு ஒரே ஏசி பொருத்தி தனியார் ஓட்டல் நிர்வாகம் புத்திசாலித்தனமாக செயல்பட்டது தொடர்பான போட்டோ தற்போது இணையதளத்தில் வெளியாகி சரிப்பலையை உண்டாக்கி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் சில இடங்களில் அதிபுத்திசாலித்தனமாக சிலர் சிந்தித்து செயல்படுவார்கள். குறிப்பாக சில தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் மின்கட்டணம், தண்ணீர் சேமிப்பை கருத்தில் கொண்டு வேறலெவலில் யோசிப்பார்கள்.

இத்தகைய புதிய யோசனை பாராட்டுகளை பெற்றாலும் கூட சில சந்தர்ப்பங்களில் காமெடியாக பார்க்கப்பட்டு விமர்சனத்துக்கும் உள்ளாகிவிடும். அந்த வகையில் தான் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தனியார் ஓட்டல் நிர்வாகம் செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

அதன் விபரம் வருமாறு:

'பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி நல்லா படிக்கமாட்டாங்க என கருதக்கூடாது' மும்பை கோர்ட்டு 'பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி நல்லா படிக்கமாட்டாங்க என கருதக்கூடாது' மும்பை கோர்ட்டு

2 அறைக்கு ஒரு ஏசி

2 அறைக்கு ஒரு ஏசி

மும்பையை சேர்ந்தவர் அனுராக் மைனஸ் வர்மா. இவர் வித்தியாசமான சிந்தனை, வித்தியாசமான யோசனை தொடர்பான போட்டோக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் பதிவிட்ட போட்டோ ஒன்று தற்போது இணையதளத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த போட்டோவில் இரண்டு அறைகளுக்கு பொதுவாக ஒரு ஏசி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது தனித்தனியாக ஏசி பொருத்தினால் செலவு அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் அறைகளுக்கு இடையேயான சுவரில் பொதுவாக இருஅறைகளுக்கும் சேர்த்து ஏசியை பொருத்தப்பட்டுள்ளது.

 இப்படி இருக்கும் என நினைக்கவில்லை

இப்படி இருக்கும் என நினைக்கவில்லை

தற்போது இந்த போட்டோ இணையதளத்தில் வேகமாக பரவியது. இந்த போட்டோவுக்கு அனுராக் மைனஸ் வர்மா விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, ‛‛மும்பையில் உள்ள ஓட்டலில் கடந்த 2011ல் தங்கினேன். ஏசி அறை கேட்டேன். அப்போது ஏற்பாடு செய்தவதாக தெரிவித்தனர். ஏசி அறையை பிரித்து தருவதாக கூறினார்கள். இதுபோன்று வித்தியாசமானதாக இருக்கும் என நினைக்கவில்லை'' என கூறியிருந்தார்.

2 அறை பயன்பாடு

2 அறை பயன்பாடு

மேலும், ‛‛இரண்டு அறைகளுக்கு பொதுவாக ஏசி பொருத்தப்பட்டு இருந்தது. ஏசியில் பாதியளவு எனது அறைக்கும், இன்னொரு பாதி பக்கத்து அறைக்கும் பயன்பட்டது. ஏசி பங்கீட்டு கொள்ளும் மற்றொரு அறையில் 2 பேர் காலை 4 மணிவரை ஆய் கன்பத் சல் தாரு லா பாடலை பாடி கொண்டிருந்தனர்'' என வேடிக்கையாக கூறியுள்ளார். இருப்பினும் இந்த ஓட்டலின் பெயர், அதன் முழு முகவரியை அவர் வெளியிடவில்லை.

நெட்டிசன்கள் கருத்துடன் பகிர்வு

நெட்டிசன்கள் கருத்துடன் பகிர்வு

அனுராக் மைனஸ் சர்மாவின் இந்த போட்டோவை தற்போது பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், நெட்டிசன்கள் தங்களது வாழ்க்கையில் இதேபோன்று அதிபுத்திசாலித்தனமான சிலர் யோசித்து அரங்கேற்றிய செயல்கள் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர். பலர் புதுமையான யோசனை தான் எனவும், உலகில் உள்ள அறிவாளிகள் அனைவரும் இந்தியாவில் தான் உள்ளனர் எனவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

English summary
A photo related to the smart work of a private hotel by installing only one AC for 2 rooms in Mumbai is now published on the internet and is being shared rapidly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X