• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

Mumbai Rains: ஊருக்குள் வந்துவிட்டதா கடல் வெள்ளம்.. ரோட்டையும் காணோம்.. தத்தளிக்கும் மும்பை

|

மும்பை: வெள்ளத்தில் மிதந்து கொண்டு உள்ளது, மகாராஷ்டிரா மாநில தலைநகரம் மும்பை. கடந்த 5 நாட்களாகவே தொடர்ந்து பெய்யும் கன மழை இதற்கு காரணம். மேலும் கன மழை அடுத்தடுத்த நாட்களில் தொடரப்போகிறது என்று எச்சரித்துள்ளது, வானிலை ஆய்வு மையம். இது மும்பை மக்கள் மத்தியில் இன்னும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மும்பையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பங்குச் சந்தைகள் மட்டும் வழக்கம்போல இயங்கும்.

மும்பை வெள்ளத்தால் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி சில படங்கள், வீடியோக்களை பார்த்தால் உங்களுக்கே தெரியும். அதுவும் நெட்டிசன்கள் தாங்கள் படும் இடர்பாட்டை, சம்பவ இடத்தில் இருந்தே பகிர்ந்து கொண்டு உள்ளனர்.

அதுபோன்ற சில வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை இந்த தொகுப்பில் பாருங்கள். மும்பை படும் அவஸ்த்தை உங்களுக்கே தெரியும்.

2005 வரலாறு திரும்புகிறது.. மும்பையில் நாளை முதல் வியாழக்கிழமை வரை கனமழைக்கு வாய்ப்பு- வெதர்மேன்

இங்க இருந்த ரோட்டை காணோம்

திடீருன்னு ஏற்பட்ட வெள்ளத்தால், ரோடு உடைக்கப்பட்டு, அடித்து செல்லப்பட்டுவிட்டது. பாதி ரோட்டையே இப்போது காணோம். இதோ பகீர் வீடியோவை பாருங்கள்.

இதுதான் ரோடா

எங்கே போனது ரோடு என தெரியாமல் வாகனம் ஓட்டிச் செல்கிறார்கள் வாகன ஓட்டிகள். அதை ஒருவர் வீடியோவாக எடுத்துப் போட்டுள்ளார். பாதாள சாக்கடைகளையாவது மூடி வைங்கப்பா. புண்ணியமா போகட்டும்.

கடலே ஊருக்குள் வந்துவிட்டதா

சுழன்று அடிக்க கூடிய இந்த தண்ணீரை பார்த்தால் கடலே ஊருக்குள் வந்துவிட்டதா என கேட்கத் தோன்றுகிறதா. இதுதான் மும்பையின் இப்போதைய நிலைமை.

களத்தில் கடற்படை

குர்லாவில், மித்தி ஆறு கரைபுரண்டு ஓடி, ஏரியா முழுவதையும் வெள்ளம் ஆக்கிரமித்துள்ளது. எனவே, மக்களை காப்பாற்ற, படகுகளுடன் இந்திய கடற்படை குர்லா பகுதியில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொள்கிறது.

மாறாத மாநகராட்சி நிர்வாகம்

1970களிலும் மும்பை இப்படித்தான் வெள்ளத்தில் மிதந்தது. 2019லும் இப்படித்தான் இருக்கிறது என இரு கால கட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களையும் வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன். மும்பை மாநகராட்சி இதுவரை விழிக்கவில்லையே என்பது இவரது குற்றச்சாட்டு.

வீட்டுக்குள் தண்ணீர்

மித்தி ஆறு கரைபுரண்டு ஓடுவதால், குர்லா பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால், மக்கள் கடும் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.

படகில் அலுவலகம்

மும்பை மக்கள் அலுவலகம் செல்ல வேண்டுமானால், இப்படித்தான் செல்ல வேண்டும் என்று நடப்பு விஷயத்தை மீம் போட்டு வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Since Friday, Mumbai has witnessed three other incidents of wall collapse due to heavy rains. The incessant rains have thrown the city out of gear with traffic and train services being affected. The Met department has predicted heavier showers this week.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more