மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை.. மீட்பு பணிகள் தீவிரம்.. இன்று பொது விடுமுறை அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    MUMBAI RAINS | வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை! மீட்பு பணிகள் தீவிரம்- வீடியோ

    மும்பை: கனமழை காரணமாக மும்பை மற்றும் புனே நகரங்களில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை, புனே, தானே, பால்கர், ராய்கட் மாவட்டங்களில் விடாது பெய்த கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டே நாட்களில் 54 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதால் மும்பை நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

    சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நடு ராத்திரி ஆனா ஒரே சத்தமாம்.. கதவை ஓங்கி ஓங்கி தட்டி.. சேலம் அருகே மக்கள் டென்ஷன்!நடு ராத்திரி ஆனா ஒரே சத்தமாம்.. கதவை ஓங்கி ஓங்கி தட்டி.. சேலம் அருகே மக்கள் டென்ஷன்!

    உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும்

    மும்பையின் கிழக்கு மலாட் பகுதியில் உள்ள பிம்பிரிபடா என்ற இடத்தில் குடிசைவீடுகள் இடிந்து விழுந்ததில் 12 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 13 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    புனேவில் 15 பேர் பலி

    புனேயில் உள்ள சிங்கேட் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். பேரிடர் மீட்புக் குழுவினர் நிகழ்விடத்தில் மீட்புப் பணியை மேற்கொண்டனர். புனேவில் கடந்த மூன்று நாட்களில், சுவர் இடிந்து விழுந்ததில், 15 பேரும், மேலும் பல்வேறு காரணிகளால் 8 பேரும் உயிரிழந்தனர்.

    பொதுவிடுமுறை அறிவிப்பு

    கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் ஐந்தாவது நாளாக தொடரும் மழையால், கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து முடக்கம்

    பல்வேறு பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் மூழ்கி உள்ளன. இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்படுகின்றன. ரெயில்கள் ரத்து, போக்குவரத்து மாற்றம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் தகவல் வெளியிட்டு வருகிறது.

    விமான சேவை பாதிப்பு

    விமான சேவையைப் பொறுத்தமட்டில் ஓடுதளத்தில் நீர் அதிகமாக இருப்பதால், சில விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும், சில விமானங்கள் தாமதமாக பயணிக்கும் என்றும் விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து மும்பை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓடுதளத்தை விட்டு வழுக்கிச் சென்றது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை என்று மும்பை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Maharashtra Govt: Public holiday for today, declared in 3 districts of the state - Mumbai City, Mumbai Suburban and Thane district. Decision has been taken due to continuous rainfall and IMD warning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X