மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Nisarga: வாகன போக்குவரத்து நிறுத்தம்.. 7 மணி நேரத்திற்கு வெளியே வர வேண்டாம்.. மக்களுக்கு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

மும்பை: நிசர்கா புயல் கரையை கடந்து வரும் நிலையில் பாந்த்ரா- வொர்லி கடற்கரை அருகே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 7 மணி நேரத்திற்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    உருவானது நிசார்கா புயல்.. நாளை கரையை கடக்கிறது

    அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மும்பையின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாகில் தெற்கே 140 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் தற்போது அலிபாகில் கரையை கடக்க தொடங்கிவிட்டது.

    நடுங்க வைக்கும் நிசர்கா புயலில் சிக்கி.. ஆட்டம் கண்ட கப்பல்!.. ரப்பர் போல் வளைந்த தென்னை மரங்கள்நடுங்க வைக்கும் நிசர்கா புயலில் சிக்கி.. ஆட்டம் கண்ட கப்பல்!.. ரப்பர் போல் வளைந்த தென்னை மரங்கள்

    கரையை கடக்கும்

    கரையை கடக்கும்

    இது அடுத்த 3 மணி நேரத்திற்குள் கரையை முழுவதுமாக கடந்துவிடும். இதனால் காற்று மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வீசி வருகிறது. குஜராத்தில் துவாரகா கடலோரத்தில் அதிக உயரத்திலாலான அலைகள் எழும்பியது. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் கொங்கன் கடலோரத்தில் வந்த நிசர்கா, ராய்காட் மாவட்டத்தில் உரான் பகுதியை நோக்கி செல்கிறது.

    தடை

    தடை

    ரத்னகிரி அருகே புயலின் கண் இருப்பதால் அங்கு கடலில் ஆக்ரோஷமாக அலை வீசி வருகிறது. அலிபாக்கில் புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது அங்குள்ள கூரைகள் காற்றில் பறந்தன. புயலின் கண் வேகமாக சுழல்வதாக கூறுகிறார்கள். இதனால் மும்பை- வொர்லி கடல் இணைப்பில் வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடை

    தடை

    ரத்னகிரி அருகே புயலின் கண் இருப்பதால் அங்கு கடலில் ஆக்ரோஷாமாக அலை வீசி வருகிறது. அலிபாக்கில் புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது அங்குள்ள கூரைகள் காற்றில் பறந்தன. புயலின் கண் வேகமாக சுழல்வதாக கூறுகிறார்கள். இதனால் மும்பை- வொர்லி கடல் இணைப்பில் வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வேரோடு சாய்ந்த மரங்கள்

    வேரோடு சாய்ந்த மரங்கள்

    ராய்காட் மாவட்டத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மக்கள் 6 முதல் 7 மணி நேரத்திற்கு வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என தேசிய பேரிடர் மீட்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர். அசம்பாவித சம்பவங்களை எதிர்கொள்ள கொரோனா வார்டுகள் இல்லாத மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    43 தேசிய பேரிடர் மேலாண்மை குழு

    43 தேசிய பேரிடர் மேலாண்மை குழு

    இந்த தீவிர புயலால் மும்பையில் உயிரின பூங்காவில் உள்ள விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்கு நேற்றைய தினமே மாற்றப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள புயல் கடக்கும் பகுதியில் வசிக்கும் 1 லட்சம் பேரை பேரிடர் மீட்பு குழுவினர் வெளியேற்றினர். மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் 43 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Cyclone Nisarga: Landfall begins in Alibag, Vehicular Movement Stopped on Bandra-Worli Sea Link; NDRF Asks People not to step out for next 6-7 Hrs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X