பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சம் - மும்பையில் லிட்டர் ரூ 92.04க்கு விற்பனை
மும்பையில் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ரூ. 92.04 என்ற அளவை எட்டியுள்ளது.கடந்த 20 நாட்களில் 3வது முறையாக பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
மும்பை: டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை வரலாறு காணாத உச்சத்தை சந்தித்துள்ளன. டெல்லியில் இன்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 85.45 ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 75.63 ஆக உள்ளது. இதே போல மும்பையிலும் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ரூ. 92.04 என்ற அளவை எட்டியுள்ளது.
சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் - டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன. இருப்பினும் இவற்றில் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வரத்தான் செய்கிறது.

நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் பெட்ரோல்,டீசலின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளன. டெல்லியில் இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 25 பைசா உயர்த்தின. இதனையடுத்து அங்கு பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 85.45 ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 75.63 ஆக அதிகரித்துள்ளது.
இதே போல மும்பையிலும் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ரூ. 92.04 என்ற அளவை எட்டியுள்ளது.கடந்த 20 நாட்களில் 3வது முறையாக பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 87.85 ரூபாய், டீசல் லிட்டர் 80.67 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து, 22 காசுகள் அதிகரித்து ரூ. 88.07 காசுகளாக உயர்ந்துள்ளது. அதே போல டீசல் நேற்றைய விலையிலிருந்து ஒரு லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.80.90காசுகளாவும் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications