10 வருஷம் ஜெயிலுக்கு பிறகும் திருந்தாத "சைக்கோ.." விடுதலையான சில நாளில் மீண்டும் போக்சோவில் கைது
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் போக்சோ வழக்கில் 10 வருடம் சிறையில் இருந்து விடுதலையான நபர் தற்போதும் மீண்டும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யான் நகரில் வசித்து வந்தவர் வீரேந்திர மிஸ்ரா என்கிற சூரஜ் சிங். இவர் கடந்த நவம்பர் 14ம் தேதி போக்சோ குற்றத்திலிருந்து விடுதலையாகி வெளியில் வந்தார்.
அதாவது, கடந்த 2012ம் ஆண்டு அவர் கட்டட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது யாருடனும் பெரிய அளவில் தொடர்பு கிடையாது.

பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் ஒரு நாள் இரவில் அவர் சாலையோரத்தில் தனது சக தொழிலாளிகளுடன்
உறங்கிக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென நள்ளிரவில் சக தொழிலாளி ஒருவர் விழித்து பார்க்கையில் அவரது அருகில் படுக்க வைக்கப்பட்டிருந்த தன்னுடைய மகனை காணவில்லை. இதனை சற்றும் எதிர்பாராத அவர் அனைவரையும் எழுப்பினார்.
அதேபோல இவர் பக்கத்தில் படுத்திருந்த வீரேந்திர மிஸ்ராவையும் காணவில்லை.
ஆனால் சிறிது நேரம் கழித்து ஏதோ புதரிலிருந்து மிஸ்ரா வெளியே வந்திருக்கிறார். இதனையடுத்து எல்லோரும் சேர்ந்து சிறுவனை தேடியுள்ளனர்.
ஆனால் சிறுவன் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதேபோல அடுத்த நாளிலிருந்து
வீரேந்திர மிஸ்ராவும் வேலைக்கு வரவில்லை.

தேடுதல்
இதற்கிடையில் அருகில் இருந்த கட்டிடத்தில சிறுவன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளான். ஆனால் தனக்கு வீரேந்திர மிஸ்ரா மீது சந்தேகம்
இல்லையென்று சிறுவனின் தந்தை கூறினார். எனவே தேடுதல் மற்றொரு பக்கம் தொடங்கியது. ஆனால் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், காவல்துறையினர் சிசிடிவி கேமிராக்களை பரிசோதித்தனர். பரிசோதனையில், வீரேந்திர மிஸ்ராதான் சிறுவன் ஒருவரை வாயை பொத்தி அருகில் இருக்கும் இடத்திற்கு தூக்கிச் செல்வது
தெரிய வந்துள்ளது. அதேபோல உடல்நிலை தேறிய சிறுவனும் வீரேந்திர மிஸ்ராவின் பெயரைதான் கூறியுள்ளான். அவர்தான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளான். எனவே வீரேந்திர மிஸ்ராவை காவல்துறையினர் தேட தொடங்கினர். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

10 ஆண்டுகள் சிறை
ஓரிரண்டு நாட்கள், ஒரு வாரம் என கடைசியாக ஒரு மாதம் கழித்து வீரேந்திர மிஸ்ராவை போலீசார் கண்டுபிடித்தனர். வீரேந்திர மிஸ்ரா மகாராஷ்டிரா
மாநிலத்திலிருந்து தப்பி தனது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்திற்கு
சென்றிருக்கிறார். பின்னர் அங்கேயே தங்கி ஒரு விசைத்தறி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இது குறித்த தகவல்கள் தெரிய வந்தவுடன் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்ட வீரேந்திர மிஸ்ரா கடந்த நவம்பர் 14ம் தேதிதான் சிறையிலிருந்து விடுதலையானார். 10 ஆண்டுகள் சிறையில் கழித்ததால் இனி தவறு செய்யக்கூடாது என்று எண்ணம் வந்திருக்கும் என அவரது உறவினர்கள் நினைத்தனர்.

மற்றொரு சம்பவம்
ஆனால் காவல்துறை அவரை பின்தொடர்ந்துக்கொண்டே இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த 1ம் தேதி இதேபோல மகாராஷ்டிராவில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது இந்த சம்பவத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் வீரேந்திர மிஸ்ராவின் தடயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து மகாத்மா பூலே காவல் நிலையத்தின் ஆய்வாளர் அசோக் ஹோன்மனே கூறுகையில், "வீரேந்திர மிஸ்ரா என்கிற சூரஜ் சிங் தான் செய்த
குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு வெறும் 32 வயதுதான். ஆனால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications