"புண்படுத்திட்டாங்க"..! சன்னி லியோனுக்கு எதிராக சாமியார்கள் போராட்டம்
மும்பை: பிரபல பாலிவுட் கவர்ச்சி புயல் சன்னி லியோனின் சமீபத்திய ஒரு பாடலில், அவர் இந்துக்களின் மனதை சன்னி லியோன் புண்படுத்திவிட்டதாக கூறி மதுராவைச் சேர்ந்த சாமியார்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
Recommended Video
நடிகை சன்னி லியோனின் நடிப்பில் சமீபத்தில் சரிகமா மியூசிக் தனது மதுபன் என்ற தலைப்பில் இசை வீடியோவை வெளியிட்டது. கடந்த 1960ம் ஆண்டு கோஹினூர் திரைப்படத்திற்காக முஹம்மது ரஃபியால் பாடப்பட்ட மதுபன் மெய்ன் ராதிகா நாச்சே பாடல் அந்த காலத்தில் சக்கை போடு போட்டது.

இந்நிலையில் அந்த பாடல் தற்போது மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு, கனிகா கபூர் மற்றும் அரிந்தம் சக்ரவர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர். பார்ட்டி பின்னணியில் உள்ள இந்த பாடலுக்கு சன்னி லியோன் நடனம் ஆடியிருந்தார்.
இந்த பாடல் கிருஷ்ணர் மற்றும் ராதா இடையேயான காதலை பற்றி இருந்த போதிலும், நடிகை சன்னி லியோனின் நடன அசைவுகள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாகவும், இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக சில இந்து அமைப்பினர் மற்றும் நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வீடியோவை தடை செய்ய வேண்டும் எனவும், சன்னி லியோன் மன்னிப்பு கேட்கவேண்டும் என மதுராயைச் சேர்ந்த சாமியார்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு சன்னி லியோனுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் அந்த ஆல்ப வீடியோவை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்திற்கு செல்வோம் என விருந்தாபன் நிறுவனத்தைச் சேர்ந்த சாந்த் நாவல் கிரி மகராஜ் கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவை வாபஸ் பெற்று சன்னி லியோன் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் இனியும் இந்தியாவில் இருக்க அனுமதிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அகில் பாரதிய தீர்த்தா புரோகித் மகா சபாவின் தேசிய தலைவர் மகேஷ் பதக், தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் சன்னி லியோனின் நடன அசைவுகள் இழிவான முறையில் இருப்பதாகவும் புண்ணியபூமியின் கௌரவத்தை அவர் களங்கப்படுத்தி விட்டதாக கூறியுள்ள, அவர் இதற்காக சன்னி லியோன் மற்றும் படக்குழுவினர் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications