Pune violence: சோஷியல் மீடியாவில் சர்ச்சை கருத்து.. இரு தரப்பினர் மோதல்! புனேவில் கலவரம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், சோஷியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய பதிவு இடப்பட்டதைத் தொடர்ந்து, இரு தரப்பினரிடையே மோதல் வெடித்திருக்கிறது. மோதல் காரணமாக கல்வீச்சு, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
புனேவின் டவுண்ட் தெஹ்ஸில் உள்ள யாவத் கிராமத்தில் இந்த வன்முறை வெடித்திருக்கிறது. இங்கு இரண்டு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் கணிசமாக வசித்து வருக்கின்றனர். இந்நிலையில், ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர், இன்னொரு சமூகத்தை சீண்டும் வகையில் சர்ச்சைக்குரிய பதிவை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டிருக்கிறார்.

இதனால், கோபமடைந்த மற்றொரு சமூகத்தினர் சண்டையில் குதித்தனர். அவர்களை எதிர்கொள்ள இந்த சமூகத்தினரும் களத்தில் இறங்கியதால், மோதல் வெடித்திருக்கிறது.
ஒரு வார்த்தை முன்பு இதே கிராமத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தால் ஏற்கனவே இரு சமூகத்தினருக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. எப்படி இருக்கும்போது தற்போது சோசியல் மீடியா பதிவு மூலம் இரு சமூகத்தினருக்கிடையே மோதல் வெடித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த மோதல் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் களம் இறக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் இரு பிரிவு மக்களும் வீதியில் இறங்கி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கட்டிடங்களை சேதப்படுத்தியும், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்களை தீவைத்து எரித்தும் வருகின்றனர்.
#WATCH | Maharashtra: Special Inspector General (IG) for Kolhapur, Sunil Phulari and SP Sandeep Singh Gill arrive at the area where tensions prevail in Pune.
— ANI (@ANI) August 1, 2025
Tense situation in Yavat village following an alleged objectionable social media post posted by a youth here. Police say… pic.twitter.com/kwKmH89Idl
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "கும்பலை கலைத்து சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கும் நாங்கள் கண்ணீர் குண்டுகளை வீச வேண்டியதாயிற்று. கலவரத்தை தடுக்கும் நோக்கில் போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட இளைஞரை நாங்கள் கைது செய்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications