ரவி சாஸ்திரி போனதும் நீங்கதான் கோச்.. பிசிசிஐ அழைப்பு.. கும்பிடு போட்ட ராகுல் டிராவிட்.. என்னாச்சு?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் பிசிசிஐ அமைப்பால் முன்மொழியப்பட்டதாகவும், இதை அவர் ஏற்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான, இந்திய கிரிக்கெட் அணி மற்றும் இந்தியா - ஏ அணிகளுக்கான தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ராகுல் டிராவிட். பெங்களூரிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் உள்ளார்.
ராகுல் டிராவிட்டின் மேற்பார்வையில்தான், பல இளம் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். அவரது சரியான கண்காணிப்பு இளம் வீரர்களை திறமையானவர்களாக உருவாக்க உதவியுள்ளது.

ராகுல் டிராவிட்டிற்கு கோரிக்கை
இந்த நிலையில்தான் ராகுல் டிராவிட்டை, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்குமாறு பிசிசிஐ கேட்டுள்ளது. பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். இவர் டிராவிட்டுடன் நீண்ட ஆண்டு காலம் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர். எனவே டிராவிட்டின் திறமை பற்றி கங்குலிக்கு நன்கு தெரியும். எனவே ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக்க வேண்டும் என்பது கங்குலியின் பெரும் விருப்பமாக இருந்துள்ளது. இருப்பினும் ராகுல் டிராவிட் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரவி சாஸ்திரி ஓய்வு
தற்போது கோச்சாக இருப்பவர் ரவி சாஸ்திரி. ஆனால் அவர் நவம்பர் 14ம் தேதியுடன் நிறைவடையும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணி பயிற்சியாளர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். எனவே அந்த இடத்திற்கு ராகுல் டிராவிட் வர வேண்டும் என்பது பிசிசிஐ விருப்பமாக இருந்துள்ளது. ரவி சாஸ்திரியுடன், பவுலிங் கோச், பரத் அருண், ஃபீல்டிங் கோச், ஸ்ரீதர் ஆகியோரும் ஓய்வு பெற உள்ளனர். எனவே ராகுல் டிராவிட் தலைமையில் புது பயிற்சியாளர் டீம் உருவாகும் என்பது பிசிசிஐ எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.
Recommended Video

ஏற்க மறுப்பு
48 வயதாகும், ராகுல் டிராவிட், 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் இதேபோன்ற வாய்ப்பை பிசிசிஐ வழங்கியபோதும் ஏற்க மறுத்து விட்டார். வெளிநாடுகளில் இந்திய அணி விளையாடும்போது பேட்டிங் ஆலோசகராக 2018ல் ராகுல் டிராவிட் பணியாற்றினார். இலங்கைக்கு சமீபத்தில் ஷிகர் தவான் தலைமையிலான, இந்திய அணி சுற்றுப் பயணம் செய்தபோது, ராகுல் டிராவிட் அந்த அணியோடு சென்றிருந்தார். அப்போது ரவி சாஸ்திரி உள்ளிட்ட பயிற்சியாளர் குழு, இங்கிலாந்தில் கோலி தலைமையிலான அணி டெஸ்ட் போட்டியில் ஆடியதால் அங்கு சென்று இருந்தது.

அனில் கும்ப்ளே விஷயம்
இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே இருந்தபோது, அணி பல வெற்றிகளை சுவைத்தது. ஆனால் கேப்டன் கோலிக்கு கும்ப்ளே பயிற்சியாளராக இருப்பது பிடிக்கவில்லை. இதனால் மோதல் வெடித்தது. சாஸ்திரி பயிற்சியாளராக்கப்பட்டார். மீண்டும் இப்போது கும்ப்ளேயை பயிற்சியாளராக்க கங்குலி முயன்றார். ஆனால் கும்ப்ளே அதை ஏற்கவில்லை. பழைய கசப்பை அவர் மறக்கவில்லை. கும்ப்ளேயுடன் கர்நாடக அணி, இந்திய அணி என தொடர்ந்து பயணித்த ராகுல் டிராவிட்டிற்கும், இந்த விஷயங்கள் அத்துப்படி என்பதால், அவர் பயிற்சியாளர் வாய்ப்பை ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications