என் சாபத்தால்தான் கர்கரே இறந்தார்.. அபத்தமான பேச்சு.. மன்னிப்புகேட்டார் பாஜக சாமியார் வேட்பாளர்!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு காவல் படையின் அதிகாரி ஹேமந்த் கர்கரே தனது சாபத்தால்தான் உயிரிழந்தார் என்று பாஜக வேட்பாளரும் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவருமான பெண் சாமியார் சாத்வி பிரக்யா கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தற்போது தனது பேச்சுக்காக சாமியார் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மகராஷ்டிரா மாநிலம் மாலேகானில் கடந்த 2008 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ம் தேதி தொழுகை முடித்து விட்டு வெளியே வந்தவர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில் மகராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார், சாத்வி பிரக்யா மற்றும் இந்து தீவிரவாத குழுவைச் சேர்ந்த சிலரை கைது செய்தது. பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட போது சாத்வி பிரக்யா மீது எந்த குற்றமும் இல்லை என்று கூறப்பட்டது இருந்தாலும் அவர் மீதான எந்த குற்றச்சாட்டையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் போட்டியிடும் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளாராக சாத்வி பிரக்யா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சாத்வி பிரக்யா மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தன்னை கைது செய்த ஹேமந்த் கர்க்காரே தன்னை லாக்கப்பில் அடைத்துவைத்து விசாரணை நடத்தியபோது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் சித்ரவதைகளை செய்தார். அப்போது தான் அவரை சபித்ததாகவும் அதனால் தான் அவர் மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிர் இழந்தார்.
சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு அசோக சக்கர விருது வென்ற, வீர மரணம் எய்திய ஸ்ரீ ஹேமந்த் கர்காரே பயங்கரவாதிகளுக்கு எதிராகச் சண்டையிட்டு உயிர் இழந்ததால் தியாகியுள்ளார். ஆகவே சீருடை அணிந்த நாங்கள் அனைவரும் மிகவும் புண்பட்டுள்ளோம், பாஜக வேட்பாளர் தன் கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், எங்களுடைய தியாகங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் பெண் சாமியார் பாஜக வேட்பாளர் பிரக்யா தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications