"சாக்லேட் + சமோசா + ஐஸ்கிரீம்".. பள்ளிகள் அருகே விற்பனைக்கு தடை.. அதிரடி உத்தரவின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

மும்பை: பள்ளி வளாகத்தில் இனி சமோசா, வடபாவ், சாக்லேட், ஐஸ்கிரீம், சிப்ஸ், குளிர்பானங்கள் உள்பட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மகாராஷ்டிராவில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

''அதிகப்படியான கொழுப்பு, இனிப்பு மற்றும் உப்பு உள்ள உணவுகளை பள்ளிகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதன்படி வடபாவ், சமோசா, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், சிப்ஸ், குளிர்பானங்கள், இனிப்பு பானங்கள், சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை பள்ளி வளாகத்திலும், பள்ளியில் இருந்து 50 மீட்டர் சுற்றளவிலும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த உணவுகள் தொடர்பான விளம்பரங்கள் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

samosa vada pav school maharashtra

பள்ளி மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்வகையில் உணவு பழக்க வழக்கங்களை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு என்பது மாநில அரசு, மாநில அரசின் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், உறைவிட பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட பிற பாடத்திட்டங்களை பின்பற்றும் மொத்தம் 1.08 லட்சம் பள்ளிகளுக்கு பொருந்தும்'' என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பள்ளி கேன்டீன், ஹாஸ்டல் கேன்டீன், மதிய உணவு தயாரிக்கும் கிச்சன், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் சமையல் கூடங்களில் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு தொடர்பான தகவல் பலகை, உணவு பாதுகாப்பு சூப்பர்வைசர், ஹெல்த் மற்றும் வெல்நஸ் அக்டிவிட்டிஸ் நடத்துவதோடு, பாதுகாப்பான குடிநீர், தூய்மையான கிச்சன் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி மகாராஷ்டிரா மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் ஆணையர் துகாராம் முண்டே கூறுகையில், ''மகாராஷ்டிராவில் 'Safe Food, Safe Maharashtra' என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கமே ஆரோக்கியமான உணவுகளை மாநில மக்கள் சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வ்து தான். குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகள் ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதனால் அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பான உணவு சென்றடைய வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளோம். அதன்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்த உத்தரவை கடைப்பிடிப்படுவதை பள்ளி முதல்வர், நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகு நாங்கள் அவ்வப்போது ஆய்வுக்கு செல்வோம். விதிகள் மீறப்பட்டு இருப்பின் நோட்டீஸ் வழங்கப்பட்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006ன் படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+