மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்லா கேளுங்க.. இந்த மாதிரி கிரெடிட், டெபிட் கார்டு ஜன. 1 முதல் செல்லாது.. எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு

Google Oneindia Tamil News

மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, குறிப்பிட்ட சில வகை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஜனவரி 1-ஆம் தேதி முதல் புழக்கத்திலிருந்து, நிறுத்துகிறது.

நாடு டிஜிட்டல் இந்தியாவாக மாறிவரும் இந்த சூழ்நிலையில், அது சார்ந்த மோசடிகளும் அதிகரித்து வருவதை மறுக்கமுடியாது.

இந்தநிலையில்தான், பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ள தனது பழைய வகை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஜனவரி 1-ஆம் தேதி முதல் புழக்கத்திலிருந்து நிறுத்துகிறது எஸ்பிஐ.

மேக்னெட்டிக் ஸ்ட்ரிப்

மேக்னெட்டிக் ஸ்ட்ரிப்

மேக்னெட்டிக் ஸ்ட்ரிப் என்று அழைக்கப்படக்கூடிய இந்தவகை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் ஒரு பக்கம் முழுக்க காந்த அதிர்வலைகள் பொருத்தப்பட்டு இருக்கும். இதை மெஷினில் ஸ்வைப் செய்யும் போது பணம் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இந்த வகை அட்டைகள் பாதுகாப்பு அம்சங்கள் குறைந்தவை என்பது ரிசர்வ் வங்கி எச்சரிக்கையாகும்.

அறிவிப்பு

அறிவிப்பு

இதையடுத்து மேக்னடிக் ஸ்ட்ரிப் வகை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக பாரத ஸ்டேட் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. இதற்கு பதிலாக சிப், வைக்கப்பட்டுள்ள கார்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கும். இதில், பின் என்னுடன் கூடிய உயர் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கும்.

கிளைகள்

கிளைகள்

கடந்த சில மாதங்களாகவே இதுபோல கார்டுகளை மாற்றும் பணியில் எஸ்பிஐ வங்கி ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஜனவரி 1ஆம் தேதி முதல், மாற்றப்படாத பழைய அட்டைகள் என்றால், அதை பயன்படுத்தவே முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் எக்ஸ்பைரி டேட் என்னவாக இருந்தாலும் சரி, ஜனவரி ஒன்றாம் தேதிக்கு மேல் அந்த அட்டையை பயன்படுத்த முடியாதாம். எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் அட்டைகளை மாற்றிக்கொள்ள வேண்டும், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளை எந்த கிளையில் வைத்துள்ளார்களோ அந்தக் கிளைக்குச் சென்றால் இதற்கான வழிகாட்டுதல்கள் தரப்படுகிறது. ஒரு விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்தால் புதிய கார்டு கொடுக்கப்படும்.

இலவசம்

இலவசம்

இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்கள் சிப் கொண்ட புதிய வகை கார்டுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது தங்கள் வங்கி கணக்கு உள்ள கிளைகளை அணுகலாம். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு, நெறிமுறைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஓடிபி

ஓடிபி

இதேபோல, ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது, ஒருமுறை கடவு எண் அதாவது ஓடிபி வழியாகத்தான் பணம் எடுக்க முடியும். ஜனவரி 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. அதேநேரம் எஸ்பிஐ வங்கி கார்டுதாரர், வேறு வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது ஓடிபி நடைமுறை இருக்காது.

English summary
State Bank of India (SBI), the country's biggest lender, will discontinue its old magnetic strip-based credit and debit cards from 1 January.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X