நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி.. பெரிய சிக்கலில் ஷாருக்கான், அஜய் தேவ்கன்! மொத்த மும்பையும் ஷாக்!
மும்பை: பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக, பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் உள்ளிட்டோருக்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
மகாராஷ்டிரா FDA ஆணையர் துக்காராம் முண்டே தலைமையில் மாநிலத்தில் புகையிலை மற்றும் பான் மசாலா விற்பனைக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

பான் மசாலாவின் விளம்பரத்தில் இவர்கள் மூவர் சேர்ந்து நடித்திருந்தனர். ஆனால், இந்த பான் மசாலா மகாராஷடிராவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் பான் மசாலாவை விளம்பரப்படுத்துகிறார்கள் என்று FDA குற்றம்சாட்டியிருக்கிறது.
சர்ச்சை விளம்பரம்
எனவே விளம்பரத்தில் நடித்ததற்காக, இவர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த விளம்பரம் நுகர்வோரை திசைத்திருப்பும் வகையில் அமைந்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நடிகர்கள் தங்கள் சமூக வலைதளப் பகக்கங்களில் இருந்து இந்த விளம்பரம் தொடர்பான பதிவுகளை 15 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
பான் மசாலா
பான் மசாலா விளம்பரத்தில் நடித்து விதிகளை மீறியதற்காக.. நடிகர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மகாராஷ்டிரா FDA ஆணையர் துக்காராம் முண்டே தலைமையில் மாநிலத்தில் புகையிலை மற்றும் பான் மசாலா விற்பனைக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பான உணவு
மகாராஷ்டிரா மாநிலம் தற்போது குழந்தைகள் நலனில் சில கறார் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. 'பாதுகாப்பான உணவு, பாதுகாப்பான மகாராஷ்டிரா' என்கிற முழக்கத்தை முன்வைத்து.. குழந்தைகளின் நலன் தொடர்பாக சில அதிரடி உத்தரவுகளை மாநில அரசு பிறப்பித்துள்ளது. அதிலும் குறிப்பாக FDA ஆணையராக துக்காராம் முண்டே பொறுப்பேற்றதிலிருந்து.. மாநிலத்தின் சிறு கடைகள், உணவகங்களின் தூக்கம் தொலைந்துள்ளன.
பெரிய நடிகர்கள்
பள்ளிகளை சுற்றி 50 மீ சுற்றளவுக்கு வடபாவ், சமோசா, வறுத்த தின்பண்டங்கள், சிப்ஸ், குளிர்பானங்கள், சர்க்கரை பானங்கள், சாக்லேட்டுகள் மற்றும் ஐஸ்கிரீம் (இவை HFSS உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன) போன்றவற்றை விற்க தடை செய்த துக்காராம் உத்தரவிட்டார். இதனால் வணிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தற்போது பான் மசாலா தடை காரணமாக பெரிய நடிகர்கள் சிக்கியிருக்கின்றனர்.
பெற்றோரின் ஆதரவு
துக்காராமின் இந்த நடவடிக்கை பரவலாக பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. காரணம் இந்தியாவில் சமீப காலமாக குழந்தைகள் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர். இதை தடுக்க துக்காராமின் நடவடிக்கை கை கொடுக்கும் என்று நம்புகின்றனர். இப்படி இருக்கையில், நடிகர்களும் இந்த விவகாரத்தில் சிக்கியிருப்பது மொத்த மகாராஷ்டிராவிலும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
