மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எதிர்க்கட்சியை ஆளும் கட்சி பாராட்றதும்.. ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி புகழ்வதும்.. குட் பாலிட்டிக்ஸ்!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சியான பாஜகவின் தலைவரான தேவேந்திர பட்னாவிஸை, ஆளும் சிவசேனா கட்சி வெகுவாக பாராட்டியுள்ளது.

சிவசேனாவும், பாஜகவும் முன்னாள் கூட்டாளிகள், பங்காளிகள்.. இப்போது பகையாளிகளாக வலம் வந்தாலும் கூட பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டவும், நெருக்கம் காட்ட வேண்டிய நேரத்தில் நெருக்கம் காட்டுவதையும் இரு கட்சிகளும் மறப்பதில்லை. அடிப்படையில் இரு கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான சித்தாந்தம் என்பதால் இவர்களுக்கிடையே நல்ல நட்பு எப்போதும் இழையோடிக் காணப்படுகிறது.

shiv sena says devendra fadnavis is doing his job good

இந்த நிலையில் முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்படுவதாக சிவசேனா கட்சி பாராட்டியுள்ளது. மேலும் கொரோனா எதிர்ப்புப் போரில் மகாராஷ்டிர அரசின் துறைகளின் செயல்பாட்டை பட்னாவிஸ் பாராட்டியுள்ளதாகவும் சிவசேனா கட்சி பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனாவின் இதழான சாம்னாவின் தலையங்கம் இப்படிக் கூறுகிறது... எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வயதில் மிகவும் இளையவர். முதல்வராக இருந்தபோது சிறப்பாகவும், துடிப்பாகவும் செயல்பட்டவர். எனக்கு கொரோனா வந்தால் நிச்சயம் நான் அரசு மருத்துவமனையில்தான் போய் சேருவேன் என்று தனது நெருங்கிய நண்பரிடம் சமீபத்தில் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அவர் பாராட்டியுள்ளர். அவரது இந்த பாராட்டு வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் அவரை சிலர் கிண்டல் செய்கின்றனர். அது தவறு. சரியல்ல. அவர் ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வருகிறார். இதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்.

சோனியாவை சந்திக்க பிரியங்காவிடம் ஒற்றை கண்டிஷன் போட்ட சச்சின் பைலட்.. இன்று உள்ளதும் போச்சு நிலை! சோனியாவை சந்திக்க பிரியங்காவிடம் ஒற்றை கண்டிஷன் போட்ட சச்சின் பைலட்.. இன்று உள்ளதும் போச்சு நிலை!

பட்னாவிஸ் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று கொரோனா பணிகளை மேற்பார்வையிடுகிறார். சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு செய்கிறார். அரசின் பணிகள் குறித்து அவர் திருப்தி தெரிவித்துள்ளார். அரசுக்கு நல்ல ஒத்துழைப்பும் தருகிறார்.

அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் உள்ளதையே அவரது திருப்தி வெளிப்படுத்துகிறது. அது அரசியல் ஸ்டண்ட் அல்ல. அரசு மீது அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு ஏதாவது நடந்தால் அரசு தன்னை காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையை அவர் கொண்டுள்ளார். இது அரசுக்கு உற்சாகம் தருவதாக உள்ளது என்று கூறியுள்ளது சாம்னா.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருவது நினைவிருக்கலாம்.

English summary
Shiv Sena has praised that Maharasthra BJP leader and Opposition leader Devendra Fadnavis is doing his job good.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X