"அப்போ அது தெரியலையா.. உறவு கசந்ததும்தான் தெரியுதா".. பலாத்கார புகார் கூறிய பெண்ணிடம் நீதிபதி கேள்வி
பெண்ணை பலாத்காரம் செய்தவரை விடுவித்தது மும்பை ஹைகோர்ட்
மும்பை: "அப்போ அது தெரியலையா.. உறவு கசந்துபோனதும்தான் புகார் தர தோணுதா... 2 பேரும் உறவில் இருந்தபோதே ஏன் புகார் தரவில்லை" என்று இளம்பெண்ணை, மும்பை நீதிபதி காட்டமாக கேட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்த பெண் அவர்.. கடந்த ஜூலை 7-ம் தேதி மும்பை போலீஸின் சைபர் பிரிவில் புகார் ஒன்றினை தந்திருந்தார்.
அதில், "நான் காலேஜ் படிக்கிறேன்.. 18 வயது இளைஞரை காதலித்தேன்.. நெருக்கமாக பழகினோம்.. ஒருமுறை என் விருப்பமே இல்லாமல் என்னை அந்த இளைஞன் பலாத்காரம் செய்துவிட்டார். ஆனால், அதை பற்றி நான் எந்த புகாரும் தரவில்லை" என்று கூறியிருந்தார்.

இளைஞர்
இந்த புகாரின்பேரில் போலீசாரும் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்தனர்... அப்போது விசாரணையில், இந்த காதலர்களுக்குள் உறவு சுமூகமாக இருந்திருக்கிறது.. ஆனால், இவர்களுக்குள் பிரச்சனை வந்தபிறகுதான் விவகாரம் வெடித்துள்ளது.. நெருக்கமாக இருந்தபோது எடுத்து கொண்ட போட்டோக்களை வெளியிடுவேன் என்று இளைஞர் மிரட்டவும்தான் பெண் போலீசில் புகார் தர முன்வந்தார் என்றும் தெரியவந்தது.

விசாரணை
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை கோர்ட்டில் நடந்தது.. நீதிபதி பாரதி தாங்கரே இதை பற்றி விசாரித்தார்.. அப்போது அவர் சொல்லும்போது, "இப்போதுள்ள இளைஞர்களுக்கு எல்லாத்திலயும் அவசரம்.. அதனால்தான் இப்படிப்பட்ட கேஸ்கள் வருகின்றன.. பக்குவம் குறைவாக உள்ளது.. அதனாலேயே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கின்றன.

பாதிப்பு
இந்த சம்பவத்தில் உடல்ரீதியான பாதிப்புகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது.. 2 பேருமே வயசுக்கு மீறிய வேகத்தை காட்டியுள்ளனர். 2 பேருக்குமே அவர்களுக்குள் இருந்த உறவு கசந்துபோய், அதற்கு பிறகே இப்படி புகார்கள் பதிவாகி உள்ளது.. ஆனால், உறவு கசந்து போவதற்கு முன்னாடி ஏன் இப்படி தரவில்லை.

பரபரப்பு
வேண்டுமானால், இது குறித்து மேலும் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட இளைஞரை போக்ஸோவில் கைது செய்யலாம்... அது வரை அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார். பாலியல் பலாத்காரம் குறித்து தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், சம்பந்தப்பட்ட பெண்ணையும் நீதிபதி சரியான கேள்வி கேட்டு, இளைஞனையும் விடுதலை செய்து உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications