மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு மாதம்தான்.. திமுகவில் இருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார்.. உத்தவ் நிலைமைதான்! அண்ணாமலை எச்சரிக்கை

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசை கலைத்தது போல தமிழ்நாட்டிலும் திமுகவில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று கூறி தமிழ்நாடு பாஜக சார்பாக சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வள்ளுவர் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி இந்த போராட்டத்தை பாஜக முன்னெடுத்துள்ளது.

திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்.. வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை உண்ணாவிரதம்திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்.. வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை உண்ணாவிரதம்

அண்ணாமலை

அண்ணாமலை

பாஜக மூத்த நிர்வாகிகள் பலர், தொண்டர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். பாஜக அமைப்பு ரீதியாக உள்ள 60 மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், காலையில் இருந்து நாம் இங்கு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாம் சுய லாபத்திற்காக இங்கே அமரவில்லை. மக்களுக்காக அமர்ந்து இருக்கிறோம்.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

திமுக ஆட்சிக்கு வந்து ஒருவருடம் ஆகிவிட்டது. 15 மாதங்களாக திமுக ஆட்சி வகித்து வருகிறது. திமுக தேர்தலுக்கு முன் 505 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. ஆனால் 15 மாதங்கள் ஆகியும் இந்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. இவர்கள் சொல்லும் விளக்கங்களையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் ஏற்கனவே 2 பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டனர்.

வாக்குறுதி

வாக்குறுதி

ஆனால் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உங்களிடம் அதற்கு எந்த காரணமும் இல்லை. நீங்கள் மக்களை ஏமாற்றிவிட்டீர்கள். தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து 25 எம்பிக்கள் பாஜகவில் இருந்து செல்வார்கள். அப்போதுதான் தமிழ்நாடு செய்த பாவத்திற்கு விமோசனம் கிடைக்கும். மக்கள் வைக்கும் கோரிக்கைகளை இந்த அரசு கேட்கவில்லை.

மக்கள் கோரிக்கை

மக்கள் கோரிக்கை

பிரிட்டிஷ் அரசு கூட மக்கள் கோரிக்கைகளை கேட்டது. ஆனால் இந்த அரசு நம்முடைய கோரிக்கைகள் எதையும் கேட்பது இல்லை. இதுவரை பாஜக மக்கள் கோரிக்கைக்காக 3 முறை போராட்டம் நடத்தி உள்ளது. வரும் நாட்களில் 1 வாரம் முழுக்க போராட்டம் நடத்தவும் கூட நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் காற்றில் இருந்து பேசவில்லை. கண்டிப்பாக 25 எம்பிக்கள் பாஜக சார்பாக தமிழ்நாட்டில் வெல்வார்கள்.

சுயநலவாதி

சுயநலவாதி

மத்திய அரசு இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. ஆனால் திமுக குறைக்கவில்லை . பாஜக ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சி இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் கரைந்து வருகின்றன. ஒரு நிமிடம் நாம் பின்னோக்கி பார்க்க வேண்டும். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் ஒரு சுயநலவாதியால் 3 கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர். சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர்.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்தும் அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அவர்களின் இரண்டு அமைச்சர்கள் பாஜக நிர்வாகிகளை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் கொடுமை செய்தனர். உத்தவ் தாக்கரே எதையும் கட்டுப்படுத்தாமல், கண்ணை மூடிக்கொண்டு இருந்தார். இப்போது அவர்களின் உள்துறை மந்திரி தேஷ்முக் சிறையில் இருக்கிறார். தேசியவாத காங்கிரசின் நவாப் மாலிக் சிறையில் இருக்கிறார்.

இது ராஜ தர்மம்

இது ராஜ தர்மம்

இது எல்லாம் அமலாக்கத்துறை வழக்குகள். இரண்டரை ஆண்டுகள் கழித்து அங்கு ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவை எதிர்த்து சிவசேனா - பாஜக ஆட்சியை அமைத்து இருக்கிறார். இப்போது உத்தவ் தாக்கரேவிற்கு 13 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. மகாராஷ்டிரா போலீஸ் பாதுகாப்போடு ஏக்நாத் ஷிண்டே சூரத்திற்கு சென்றார். ஆட்சியில் நீங்கள் இருக்கலாம். ஆனால் உங்களுக்கே என்ன நடக்கும் என்று தெரியாது. போலீசே உங்கள் பக்கம் இருக்காது. இது ராஜ தர்மம். நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டியது நடக்கும். மகாராஷ்டிரா அரசுக்கு இரண்டரை ஆண்டுகள் கழித்து அது நடந்தது.

தமிழ்நாட்டில் எப்போது

தமிழ்நாட்டில் எப்போது

தமிழ்நாட்டிற்கு எப்போது நடக்கிறது என்று பார்ப்போம். பாருங்கள் இன்னும் ஒரு மாதம்தான். எங்களிடம் ஒரு ஏக்நாத் ஷிண்டே இல்லை. நிறைய பேர் இருக்கிறார்கள். திமுகவில் ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார். தமிழ்நாட்டில் திமுகவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே புறப்பட தயாராக இருக்கிறார். உதயநிதியை அமைச்சராக்கினால் திமுகவில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார். சிவசேனா வேறு - திமுக வேறு என்று இவர்கள் கூறுவார்கள்.

இரண்டாவது மகன்

இரண்டாவது மகன்

இரண்டும் வேறா என்பதை பார்ப்போம். தாக்கரேவின் முதல் மகன் பிந்து தாக்கரே சினிமாவில் நடிக்க முயன்றார் படம் ஓடவில்லை. கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து சினிமாவில் நடிக்க முயன்றார். அவருக்கும் செட்டாகவில்லை. தாக்கரேவின் இரண்டாவது மகன் குடும்பத்தில் இருந்து வெளியே இருக்கிறார். அதேபோல் கருணாநிதியின் இரண்டாவது மகன் அழகிரி குடும்பத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

Recommended Video

    தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க ஆசை வந்துவிட்டது... Nainar Nagendran பரபரப்பு பேச்சு | #Politics
    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    அங்கே மூன்றாவது மகன் உத்தவ் முதல்வர் ஆனார். இங்கே கருணாநிதியின் மூன்றாவது மகன் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். அங்கே ஆதித்யா தாக்கரே இளைஞரணி செயலாளராக இருந்தார். பின்னர் அமைச்சர் ஆனார். இங்கே உதயநிதி இளைஞரணியில் இருக்கிறார், அவர் அமைச்சர் ஆகும் போது கண்டிப்பாக ஒரு ஷிண்டே திமுகவில் இருந்து வருவார். அது நடக்கும். இதெல்லாம் இயற்கை உருவாக்கியது. இது இயற்கை உருவாக்கிய சக்தி, என்று அண்ணாமலை திமுக சிவசேனாவை ஒப்பிட்டு இன்றைய போராட்டத்தில் பேசினார்.

    English summary
    Tamil Nadu ruling DMK also will see a Shinde soon like Maharashtra says Annamalai. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசை கலைத்தது போல தமிழ்நாட்டிலும் திமுகவில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X