படுத்தது அதானி பங்குகள்.. பங்கு சந்தை முழுக்க "சிவப்பு சிவப்பு".. அதானி -செபியை ஆடவைத்த ஹிண்டன்பர்க்
மும்பை: அதானி குழுமம் மற்றும் செபி மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. இதன் காரணமாக இன்று பங்கு சந்தை சரிவுடன் தொடங்கி உள்ளது. மொத்தமாக சென்செக்ஸ் சரிந்து உள்ளது. அதேபோல் அதானி பங்குகள் மொத்தமாக சரிவை சந்தித்து உள்ளன.
காலை 9:35 மணியளவில் சென்செக்ஸ் 225.65 புள்ளிகள் அல்லது 0.28% குறைந்து 79,480.73 ஆக இருந்தது. நிஃப்டி 84.55 புள்ளிகள் அல்லது 0.34% குறைந்து 24,283.952 ஆக இருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து பெரும்பாலான அதானி குழுமப் பங்குகள் சிவப்பு நிறத்தில் (1 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை) தொடங்கி உள்ளன. IIFL Finance மற்றும் 360 One ஆகியவை முறையே 2 சதவீதம் மற்றும் 1 சதவீதம் சரிந்தன. அதானி பங்குகள் கிட்டத்தட்ட 4 சதவிகிதம் வரை சரிந்து உள்ளது.

குற்றச்சாட்டு: கடந்த வருடம் அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை வைத்தது. இந்த விவகாரத்தில் அப்போது செபி பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்திலும் அதானிக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான், அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) தலைவர் மாதபி புச்-க்கு பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டு உள்ளது. முறைகேட்டில் உடந்தை என்பதாலேயே அதானி குழுமம் மீது SEBI தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பரபரப்பு புகார் வைத்து உள்ளது.
என்ன புகார்?: அமெரிக்காவைச் ஹிண்டன்பர்க் ரிசர்ச் இந்தியாவின் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்துள்ளார். அதனால்தான் அதானி மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
அதாவது செபி அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்ததே காரணம். அதானி குழுமம் எந்த அச்சமும் இல்லாமல் பணிகளை செய்கிறது. இதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு இடையே உள்ள உறவே காரணம்.
தற்போதைய செபி தலைவரும் அவரது கணவர் தவால் புச்சும், வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பங்குச்சந்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். அதானியின் பங்குகளில் இவர்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்துள்ளனர். அதானிக்கு சரிவு ஏற்பட்டால் தங்களுக்கும் சரிவு ஏற்படும் என்று செபி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்று இதில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
மதாபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலில் சிங்கப்பூரில் ஜூன் 5, 2015 அன்று ஐபிஇ பிளஸ் ஃபண்ட் 1 இல் தங்கள் கணக்கை தொடங்கி உள்ளனர். எங்களுக்கு கிடைத்த விசில்ப்ளோவர் ஆவணங்கள் மூலம் அந்த தம்பதியரின் நிகர மதிப்பு $10 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே பங்குகளில் அதானி குழுமமும் முதலீடுகளை செய்துள்ளது. செபி தலைவரும் அவரது கணவர் தவால் புச்சும், வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பங்குச்சந்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர், என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை செபி மீது ஹிண்டன்பர்க் வைத்துள்ளது.
பங்குகள் சரிய வாய்ப்பு: அதானி குழுமம் மற்றும் செபி மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. இதன் காரணமாக நாளை பங்கு சந்தை ரத்தக்களரியாக இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் சரிய வாய்ப்புகள் உள்ளன. அந்த பங்குகளின் விளைவுகள் காரணமாக சங்கிலி விளைவு போல மற்ற பங்குகளின் மதிப்பும் சரியாய் வாய்ப்புகள் உள்ளன.
நாளை அதானி குழுமத்தில் இருந்து பலர் பங்குகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் அதானி குழுமம் காரணமாக மற்ற நிறுவனங்களின் பங்குகளும் சரியலாம். இது அதானி குழுமம் என்பதை தாண்டி செபி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஆகும். செபிதான் பங்கு சந்தை ஒழுங்காற்று வாரியம்.. அப்படி பட்ட வாரியம் புகாரில் சிக்கி உள்ளது.
இதனால் அதானி குழுமம் என்று இல்லாமல் மொத்தமாகவே பங்கு சந்தை சரிய வாய்ப்புகள் உள்ளன. மொத்தமாக பங்கு சந்தையில் பல பங்குகள் படுக்க வாய்ப்புகள் உள்ளன.
கடந்த வருடம் வைத்த புகார்: அதானி நிறுவனம் தனது வருமானத்தை பொய்யாக உயர்த்தி காட்டி உள்ளது, உறவினர்களை பயன்படுத்தி போலியான நிறுவனங்களை வெளிநாட்டில் தொடங்கி போலி பரிவர்த்தனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பங்குகளை பொய்யாக உயர்த்தி அதை வைத்து கடனும் வாங்கி உள்ளது, அதாவது பொய்யாக கொண்டு வரப்பட்ட முதலீடுகள் மூலம் பொய்யாக உயர்த்தப்பட்ட பங்குகளை வைத்து கடன் வாங்கி உள்ளது. கையில் பணமே இல்லாமல் எல்லாம் பொய்யான முதலீடுகள் மூலம் வரவு செலவு இருப்பதாக காட்டி ஏமாற்றி உள்ளது.
தனது வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம் செய்துள்ளது என்று புகார்களை அதானி குழுமம் மீது இந்த ஹிண்டர்ன்பர்க் வைத்தது. இதை அதானி குழுமம் மறுத்து இருந்தாலும், ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் தங்கள் ரிப்போர்ட்டில் உறுதியாக உள்ளது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications