• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதுகில் குத்திவிட்டனர்... ஆட்சி கலைப்புக்கு சதி திட்டம் போட்டது எப்படி?மவுனம் கலைத்த உத்தவ் தாக்கரே

Google Oneindia Tamil News

மும்பை: தனது ஆட்சிக்கு எதிரான சதித்திட்டம் யாரால் எப்படி தீட்டப்பட்டது என்பது குறித்து முதல்வர் பதிவியில் இருந்து விலகிய பிறகு முதல் முறையாக உத்தவ் தாக்கரே மவுனம் கலைத்துள்ளார்.

மராட்டியத்தில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா ஜனதாவுடன் தீவிர இந்துத்வா கொள்கையை கொண்ட மண்ணின் மைந்தன் என சொல்லப்படும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விட அதிக இடங்களை கைப்பற்றி பாஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் முதல்வர் பதவியை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட மோதலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, கொள்கைகளில் மாறுபட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை பிடித்தது.

இனி பவர் கட்டுக்கு குட் பை! மின்மிகை மாநிலமாகும் தமிழ்நாடு.. 5 மாதம் நோ பிராப்ளம் இனி பவர் கட்டுக்கு குட் பை! மின்மிகை மாநிலமாகும் தமிழ்நாடு.. 5 மாதம் நோ பிராப்ளம்

 உத்தவ் தாக்கரேக்கு பேரதிர்ச்சி

உத்தவ் தாக்கரேக்கு பேரதிர்ச்சி

இதனால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா ஜனதா எதிர்க்கட்சி கட்டிலில் அமர்ந்தது. தீவிர இந்துத்வா கொள்கையை கொண்ட சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது பலருக்கு சலசலப்பை ஏற்படுத்தினாலும், கிட்டத்தட்ட 2 அரை ஆண்டுகள் அந்த கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைத்து வந்தது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக ஏக்னாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களாக சிலரை சிவசேனா அதிருப்தி அணியினர் கூறி அவர்களுடன் அசாம் மாநிலத்தில் உள்ள ஓட்டலில் தஞ்சமடைந்ததோடு, நாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று கூறினார். இது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு திடீர் பேரிடியாக அமைந்தது.

 ஆட்சி கவிழ்ப்பு

ஆட்சி கவிழ்ப்பு

தொடர்ந்து சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக மராட்டியத்தில் அந்த கூட்டணி ஆட்சி கடந்த மாதம் 29-ந் தேதி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்ததோடு முதல்வர் பதவியும் ஏற்றுக்கொண்டார். மராட்டிய சட்டசபையில் சிவசேனாவுக்கு மொத்தம் உள்ள 55 எம்.எல்.ஏ.க்க ளில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் ஏக்நாத் ஷிண்டேயை சிவசேனா சட்டமன்ற குழு தலைவராக சபாநாயகர் அறிவித்தார். இதேபோல நாடாளுமன்ற மக்களவையில் சிவசேனாவுக்கு உள்ள 19 எம்.பி.க்களில் 12 பேர் ஷிண்டே அணிக்கு தாவினர். ஷிண்டே அணியை சேர்ந்த ராகுல் செவாலே எம்.பி.யை சிவசேனா லோக் சபா குழு தலைவராக சபாநாயகர் ஓம்பிர்லா கடந்த செவ்வாய்க்கிழமை அங்கீகரித்தார்.

 மவுனம் கலைத்த உத்தவ் தாக்கரே

மவுனம் கலைத்த உத்தவ் தாக்கரே

இந்த நிலையில், எது ரியல் சிவசேனா என்பதை நிரூபிக்குமாறு கோரிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு முறையிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மராட்டியத்தில் ஏற்பட்ட இந்த பெரிய அரசியல் குழப்பத்திற்கு என்ன தான் காரணம் என்பதற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதில் தெரிவித்துள்ளார். குறிப்பாக முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின்னர் முதல் முறையாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ கட்சி நாளேடான சாம்னாவுக்கு உத்தவ் தாக்கரே பேட்டி அளித்தார். இந்தப் பேட்டியில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:

Recommended Video

  Roadல் உட்கார்ந்த ராகுல் காந்தியை கைது செய்த போலீஸ்
   சதித்திட்டம்

  சதித்திட்டம்

  ஆட்சி கவிழ்ப்புக்கான சதி நான் மருத்துவமனையில் இருந்த போது நடைபெற்றுள்ளது. நான் அசைய முடியமால் இருந்த போது, அவர்களின் திட்டம் வேகமாக இருந்துள்ளது. ஏக்னாத் ஷிண்டேவை நான் முதல் மந்திரியாக ஆக்கியிருந்தால் கூட அவரது லட்சியங்கள் மோசமானதாகத்தான் இருந்து இருக்கும். ஏக்நாத் ஷிண்டேவை நம்பியதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். ஏக்நாத் ஷிண்டே அணியினர் எனது தந்தை பெயரை சொல்லி வாக்கு கேட்கக்கூடாது. அழுகிய இலைகள் மரத்தில் இருந்து விழுந்தே ஆக வேண்டும். ஒரு மரத்தில் இருந்து அனைத்து பலனையும் பெற்றவர்கள், தற்போது மரத்தை மட்டும் அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டடனர். தற்போது பிரிந்து சென்றவர்கள்தான் அதிக பலனை பெற்றவர்கள். ஆனால், சாதாரண தொண்டர்களிடம் இருந்து இனி மகத்தான தலைவர்களை பெற உள்ளோம்.

   சிவசேனாவை அழிக்க முயற்சி

  சிவசேனாவை அழிக்க முயற்சி

  பாஜகவை பொறுத்தவரை எங்களின் கோரிக்கைகளை 2019ல் ஏற்றுக்கொண்டு இருந்தால் அக்கட்சியின் மீதான மரியாதை அதிகரித்து இருக்கும். ஆனால், பல கோடிகள் செலவழித்து பாஜக தற்போது அதையே திருமப செய்துள்ளது. டெல்லியும் (மத்திய அரசு) மராட்டியத்தின் முதுகில் குத்திவிட்டது. இந்துதுத்வா கொள்கைகளில் தங்களுக்கு இன்னொரு கூட்டாளி வந்து விடக்கூடாது என எண்ணி சிலர் சிவசேனாவை அழிக்க முயற்சிக்கின்றனர். மகாஸ் விகாஸ் அகாடி கூட்டணி அமைத்து ஆட்சி செய்த பரிசோதனை தவறாக இருந்திருந்தால் மக்களே எங்களுக்கு எதிராக கொந்தளித்து இருந்திருப்பர். துணை முதல் மந்திரி அஜித் பவார் ஒருபோதும் என்னிடம் இருந்து மைக்கை பிடுங்கியது கிடையாது"என்றார்.

  English summary
  We were betrayed because we blindly trust everyone, Shiv Sena chief Uddhav Thackeray, in his first interview to party's mouthpiece 'Saamana' after stepping down as the chief minister of Maharashtra.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X