மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'சில பொறுப்பற்ற நாடுகள்..' சீனாவை மறைமுகமாக வெளுத்து வாங்கிய ராஜ்நாத் சிங்.. பரபர பேச்சு வைரல்

Google Oneindia Tamil News

மும்பை: முற்றிலுமாக இந்தியாவில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விசாகபட்டினம் போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவை மறைமுகமாகத் தாக்கி சில பரபரப்பு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    China, Pakistan-ஐ வெளுத்து வாங்கிய Rajnath Singh | Oneindia Tamil

    மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாகக் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விசாகபட்டினம் போர்க்கப்பல் இந்தியா கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    4 KM தூரம் நின்ற வாகனங்கள்; முடிவு தெரியாமல் கலைய மறுத்த மக்கள்; ஸ்தம்பித்த சென்னை -பெங்களூர் ஹைவே! 4 KM தூரம் நின்ற வாகனங்கள்; முடிவு தெரியாமல் கலைய மறுத்த மக்கள்; ஸ்தம்பித்த சென்னை -பெங்களூர் ஹைவே!

    முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    கவலைக்குரிய விஷயம்

    கவலைக்குரிய விஷயம்

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், மறைமுகமாகச் சீனாவையும் விமர்சிக்கும் வகையில் பேசினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், "சில நாடுகளால் ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சார்ந்த விதிகளை மீறி சர்வதேச விதிகளை பலவீனமாக்குவது கவலைக்குரிய விஷயம்.

    மறைமுகமாகத் தாக்கு

    மறைமுகமாகத் தாக்கு

    சில பொறுப்பற்ற நாடுகள், அவர்களின் குறுகிய பாகுபாடு, சொந்த நாட்டு நலன்கள், மேலாதிக்கப் போக்கு காரணமாகச் சர்வதேச சட்டங்களின் தவறான முறையில் வரையறுக்க முயல்கின்றன. கடற்கொள்ளை, பயங்கரவாதம், ஆயுத கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல், சுற்றுச்சூழலுக்குச் சேதம் விளைவிப்பது போன்றவையும் நமது கடல்சார் பகுதிகளின் மீது நடத்தப்படும் தாக்குதல் தான். எனவே, முழு இந்தோ பசிவிக் கடலை பாதுகாப்பும் பொறுப்பு இந்தியக் கடற்படைக்கு உள்ளது. இந்தியாவின் நலன்கள் மட்டுமின்றி உலகப் பொருளாதாரமும் இந்தியப் பெருங்கடலுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    அதிநவீன வசதிகள்

    அதிநவீன வசதிகள்

    தொடர்ந்து இந்தியாவின் போர்க்கப்பல்களைக் கட்டும் திறன் குறித்துப் பேசிய அமைச்சர், "இந்த விசாகப்பட்டினம் போர்க்கப்பல் நமது நாட்டில் கட்டப்பட்டுள்ள போர்க்கப்பல்களில் மிகவும் பெரியது. எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை டேஸ்டிராயர்களுடன் இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேக் இன் இந்தியா

    மேக் இன் இந்தியா

    இது மட்டமில்லை மேக் இன் இந்தியா திட்டத்தில் நமது நாடு போர்க்கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளது. அரசு மற்றும் தனியார்த் துறைகளின் பங்களிப்புடன் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவை உள்நாட்டுக் கப்பல் கட்டும் மையமாக உருவாக்க எல்லா வாய்ப்புகளும் நமக்கு உள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

    ஐ.என்.எஸ். விசாகப்பட்டணம் போர்க்கப்பல்

    ஐ.என்.எஸ். விசாகப்பட்டணம் போர்க்கப்பல்

    மும்பையில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தால் ‛மேட் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது தான் இந்த 7,400 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விசாகப்பட்டணம் போர்க்கப்பல். நவீன போர் கருவிகள், ரேடார்களால் கண்டுபிடிக்க இயலாத, ராக்கெட்களை உடைய இந்த போர்க்கப்பல் இந்தியா பாதுகாப்புத் துறையில் முக்கிய மைல்கல் ஆகும்.

    English summary
    Defense Minister Rajnath Singh's latest statement about China. India China standoff latest updates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X