அப்பாயிண்ட்மெண்ட் இருக்கான்னு கேட்ட ஐஏஎஸ் ஆபிசர்.. 'சம்பளம் தருவதே நாங்கதான்!' சாமானியன் நச் வீடியோ
மும்பை: அரசு ஊழியர்கள் குடிமக்களுக்கு சேவை செய்வதற்காகவே இருக்கிறார்கள், மாறாக குடிமக்கள் அரசு அதிகாரிகளுக்கு சேவை செய்வதற்காக அல்ல என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் சாமானியர் ஒருவருக்கு இடையே நடந்ததாக பரவும் அந்த வீடியாவில் உள்ள காட்சிகளை அப்படியே பார்ப்போம்.
ஐஏஎஸ் அதிகாரி: "உங்களிடம் அப்பாயிண்மெண்ட் உள்ளதா? இல்லை என்றால் பிறகு வாருங்கள்."
வரி செலுத்துவோர்: "நீங்கள் ஒரு அரசு ஊழியர், தனியார் நிறுவன ஊழியர் அல்ல. உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் மக்களுக்கு சேவை செய்வது உங்கள் கடமை, அது ஒரு சலுகை அல்ல." என்று நாக்பூர் பொதுப்பணித்துறை கூட்டத்தில் ஒருவர் பேசுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இன்று காலை முதலே வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ பலரின் பாராட்டை பெற்றாலும் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ காட்சிகளை பார்க்கும் போது அப்பாயிண்மெண்ட் விஷயங்களை ழுங்கமைக்கலாம், ஆனால் அவை ஒருபோதும் உரிமை கோருவதற்கோ அல்லது தாமதப்படுத்துவதற்கோ ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடாது. சமானிய மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் தங்கள் பொறுப்புகளை தட்டிக்கழிக்க முடியாது. அதேபோல் அவர்கள் எளிதில் அணுக கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. இதுபற்றி பல்வேறு இணையவாசிகள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்.
முதல் நெட்டிசன் கூறுகையில், "மக்கள் பெரும்பாலும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களையும், அமைச்சர்களையும் கேள்வி கேட்கத் தயங்குகிறார்கள்; அதே சமயம், தங்கள் கோரிக்கைகள் மற்றும் விமர்சனங்கள் அனைத்தையும் அரசு அதிகாரிகளை நோக்கியே முன்வைக்கிறார்கள்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: பொறுப்புக்கூறல் என்பது நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உரியதல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களே. பொதுப் பொறுப்புக்கூறல் என்பது அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்" என்றார்.
IAS Officer: Do you have an appointment? Come back later.Taxpayer: You are a public servant not a private employee. Serving the people who pay your salary is your duty not a favour. https://t.co/MCJM4C4jOe
— Dr. Rajeshwari Iyer (@RajeshwariRW) November 5, 2026
இரண்டாவது நெட்டிசன் கூறுகையில், "அந்த சாமானியர் சொல்வது சரிதான். ஒவ்வொரு அரசு ஊழியரும் பொது மக்கள் அவரை / அவளைச் சந்திப்பதற்கான நேரத்தை தெளிவாக வழங்க வேண்டும். இது இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் வந்து அதிகாரி இல்லாத பட்சத்தில் அவர்களை அழைத்து பின்னர் பேச வேண்டும். அது கடினமானதா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மூன்றாவது நெட்டிசன் கூறுகையில், "இந்த கவலையை நான் ஏற்கனவே பலமுறை எழுப்பியுள்ளேன். ஐஏஎஸ், மாநில அரசு அதிகாரிகள் நமது அமைப்பில் மிகப்பெரிய கரையான்களாக மாறிவிட்டனர். ஊழல், சில அதிகாரிகள் நூற்றுக்கணக்கான கோடி மதிப்பிலான சொத்துக்களை குவித்ததாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையென்றால், அத்தகைய அதிகாரிகள் ஏன் விசாரிக்கப்படுவதில்லை?
நாம் ஏன் இன்னும் ஆங்கிலேயர் கால நிர்வாகக் கட்டமைப்பைப் பின்பற்றுகிறோம்? மக்களுக்கு சேவை செய்வதை விட மக்களுக்கு ஆட்சி செய்ய முதலில் வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பில் ஏன் அடிப்படை மாற்றங்களை கொண்டு வர முடியாது? நமது நிர்வாக அமைப்பில் முழுமையான மாற்றம் தேவை. இல்லையேல் இன்று நாம் படும் துன்பத்தை விடவும், நம்முடைய சந்ததியினர் வரும் காலத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.
குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், சீனாவில் நாம் காணும் கடுமையான அமலாக்க வழிமுறைகளைப் போலவே, அரசாங்கம் கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தி, பொறுப்புக்கூறலை உறுதிசெய்து, ஊழலுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் என்பது நம் நாட்டின் அஸ்திவாரத்தைத் தின்றுவிடும் கரையான் போன்றது. இப்போது அதை அகற்றவில்லை என்றால், நம் குழந்தைகளுக்கு உடைந்த அமைப்பை விட்டுச் செல்வோம்" இவ்வாறு கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
