• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கணவனின் காலை கட்டி.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றி.. மிளகாய் பொடி தூவி.. சுத்தியலால் அடித்த கொடூர மனைவி

|
  கள்ளக்காதலால் கணவனை சுத்தியலால் அடித்த கொடூர மனைவி

  மும்பை: கணவன் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில்.. அவரது கால்களை கட்டி போட்டு... கொதிக்கும் எண்ணெயை உடலில் ஊற்றி... மிளகாய்ப் பொடியை கண்ணில் தூவி... சுத்தியலால் தலையில் அடித்து... கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் மனைவி. இது எல்லாத்துக்கும் காரணம் நாசமா போன கள்ளக்காதலே!

  அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதி பாவிஷ்யா பர்ஹகோஹைன் - குவின்சியா. 5 வருடத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது. 4 வயதில் இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள். குவின்சியாவுக்கு வயசு 28!

  பாவிஷ்யா, பவாயில் உள்ள கால் சென்டரில் வேலை செய்து வந்தபோது, மும்பையை அடுத்த வசாய் அருகே நைகாவில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். அந்த சமயத்தில் சத்விர் நாயர் என்ற 24 இளைஞருடன் குவின்சியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ள உறவு வளர்ந்தது. இந்த இளைஞர் மெஹந்தி போடும் வேலை பார்ப்பவராம். விஷயம், கணவனுக்கு இது தெரிந்ததும், மனைவியை கண்டித்தார்.. கேட்கவில்லை!!

  கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் தற்கொலையா? மரணத்தில் சந்தேகம்.. போலீசார் அதிரடி விசாரணை!

  ஆத்திரம்

  ஆத்திரம்

  இதனால் வீட்டை காலி செய்து விட்டு வசாய் கிழக்கு, பிரதாப்கட் சொசைட்டியில் வாடகைக்கு வந்து குடியேறினார். ஆனால் கள்ளக்காதலன் சத்விரும் அதே பகுதிக்கு வந்து குடியேறினார். இதனால் தம்பதிக்குள் சண்டை வெடிக்க ஆரம்பித்தது. இப்படித்தான் சம்பவத்தன்றும் சண்டை வந்தது. பிறகு தூங்க போய்விட்டார். ஆனாலும் கள்ளக்காதலை பிரிக்க நினைக்கும் கணவன் மீது ஆத்திரத்திலேயே இருந்த குவின்சியா, கொல்ல முடிவு செய்து.. கள்ளக்காதலனை போன் போட்டு வீட்டுக்கு வர சொன்னார்.

  மிளகாய் பொடி

  மிளகாய் பொடி

  தூங்கிக் கொண்டிருந்த பாவிஷ்யாவின் துணிகளை முதலில் கழட்டினர்... கால்கள் இரண்டையும் கட்டினர்... கொதிக்கும் எண்ணெய்யை அவருடைய உடல் மீது ஊற்றினர்... மிளகாய்ப் பொடியை கண்ணில் தூவினர்... பிறகு சுத்தியலால் தலையில் ஓங்கி அடித்தனர்... உடலில் கரன்ட் ஷாக்கூட கொடுத்தனர்!

  போலீஸ்

  போலீஸ்

  வலி தாங்காமல் பாவிஷ்யா அலறி, கையில் கிடைத்த குக்கர் உள்ளிட்ட பாத்திரங்களை தூக்கி இந்த கள்ளக்காதல் ஜோடி மீது எறிந்தார். ஆனால் அவை இவர்கள் மீது படாமல், ஜன்னல் வழியாக வெளியே போய் விழுந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஏதோ பிரச்சனை என்பதை உணர்ந்து, உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

  பாத்ரூம்

  பாத்ரூம்

  போலீசார் விரைந்து வருவதற்குள் வீடே அமைதியாக இருந்தது. கள்ளக்காதல் ஜோடி அமைதியாக சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் இரண்டும் கதறி அழுதவாறே இருந்தனர். பாவிஷ்யா பாத்ரூமில் வைத்து பூட்டப்பட்டு கிடந்தார். இதையடுத்து கதவை உடைத்து சென்ற போலீசார் படுகாயங்களுடன் விழுந்து கிடந்த பாவிஷ்யாவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  கைது

  கைது

  குழந்தைகளை குவின்சியாவின் சொந்தக்காரர்களிடமும் ஒப்படைத்தனர். இதையடுத்து இந்த ஜோடியை போலீசார் கைது செய்து,கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாவிஷ்யாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.

   
   
   
  English summary
  2 People including Wife arrested for trying to kill her husband due to illegal relationship near Mumbai
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X