மேகி சாப்பிட்ட பெண் திடீர் பலி.. திடுக்கிட வைக்கும் எலி மருந்து விவகாரம்.. மும்பையில் பகீர்
மும்பை: மும்பையில் மேகி சாப்பிட்ட 35 வயது பெண் பலியான நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அந்த பெண்ணின் சாவுக்கு காரணமான எலி மருந்து பற்றிய பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
சமீப காலமாக துரித உணவுகள் சாப்பிட்டு சிலர் இறந்து வருகின்றனர். தரமற்ற முறையில் உணவு சமைத்தது, நாள்பட்ட சிக்கனை பயன்படுத்தியது தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் இறந்தார். இதற்கு ஷவர்மாவில் இருந்து ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருமுருகன் என்ற 12ம் வகுப்பு மாணவர் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு இறந்தார்.

மும்பையில் மேகி சாப்பிட்ட பெண் பலி
இந்த சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதன் தொடர்ச்சியாக கடந்த 20ம் தேதி மும்பையில் ஒரு பெண் மேகி சாப்பிட்ட நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அந்த பெண்ணின் இறப்புக்கான காரணம் என்ன? என்பது குறித்து டாக்டர்கள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

35 வயது பெண்
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையின் மாலட் பகுதியில் உள்ள பாஸ்கால் வாடியில் வசித்து வந்தவர் ரேகா நிசாத் (வயது 35). இவர் தனது கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி வீட்டில் மேகி சமைத்து சாப்பிட்டார். இதை சாப்பிட்ட அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை
இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இருந்தார். இவரது இறப்பு என்பது பல்வேறு சந்தேகங்களையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர். டாக்டர்களும் அவரது இறப்புக்கான காரணத்தை ஆய்வு செய்தனர்.

எலிக்கு வைத்த தக்காளியால் சாவு
இந்த விசாரணையில் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛மேகி சாப்பிட்டு இறந்ததாக கூறப்படும் பெண்ணின் வீட்டில் எலித்தொல்லை இருந்துள்ளது. இதனால் அவர் எலியை கொல்வதற்காக அதற்கான மருந்தை தக்காளியில் தடவி வைத்துள்ளார். இந்நிலையில் தான் தவறுதலாக எலி மருந்து தடவிய தக்காளியை அவர் எடுத்து மேகியுடன் சேர்த்து சாப்பிட்டுள்ளார். இவரது சாவுக்கு எலி மருந்து தடவிய தக்காளி தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications