பார்ட் பார்ட்டாக கழண்டுடுச்சு.. நாகையில் அரசு பஸ்ஸுக்குள்ளே சிலுசிலுன்னு காத்து வருதே.. காரணமே வேற
நாகை: தமிழகமெங்கும் அரசு பஸ்களில் ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.. இந்நிலையில், ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே திருச்சி, விருதுநகரில் அரசு பஸ்கள் சேதமாகியதுடன், நாற்காலியுடன் சாலையில் விழுந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

திருச்சி: திருச்சி நகர பேருந்தில், கண்டக்டர் இருக்கையின் நெட்டு போல்டு திடீரென கழண்டுவிட்டது.. இதனால், சீட்டில் உட்கார்ந்திருந்த கண்டக்டர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்... இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் அலறி கூச்சலிட்டார்கள்..
அதேபோல, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த 15ம் தேதி பஸ்ஸின் பின்பக்க படிகட்டு உடைந்து சாலையின் நடுவே விழுந்தது... அதனை டிரைவரும், கண்டக்டரும் எடுத்து சென்ற காட்சிகள் இணையத்தில் பேசுபொருளானது.
உத்தரவு: இதையடுத்து அரசு போக்குவரத்து கழகங்களில் 6 ஆண்டுகள் தாண்டிய, பஸ்களை எல்லாம் உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் புதிய பஸ்களை வாங்கி இயக்கப்பட வேண்டும் என்றும், பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும், போக்குவரத்து கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.. அரசு பஸ்களில் ஆய்வு மேற்கொண்டு, அடுத்த மூன்று நாட்களில் அவற்றை சீரமைக்க, போக்குவரத்து கழகங்களுக்கு தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து துறை: பஸ்ஸில் ஏதாவது குறைகள் இருந்தால், 48 மணி நேரத்துக்குள் சீரமைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறையானது உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகரப் பேருந்து உள்ளிட்ட 20 ஆயிரம் பேருந்துகளை ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில், பின்பக்க கண்ணாடி இல்லாமலேயே அரசு பஸ் ஒன்று நாகையில் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.. வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பின்புற கண்ணாடியே இல்லையாம்.. முழுக்க முழுக்க திறந்த நிலையிலேயே அந்த பஸ் சென்று வருகிறதாம்..
வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி கடற்கரையோர பகுதி என்பதால், அங்கிருக்கும் குளிர்காற்று பஸ்ஸுக்கு உள்ளேயும் வீசுகிறதாம்.. வேறுவழியின்றி அங்குள்ள பொதுமக்களும் இந்த பஸ்ஸில், பயணம் செய்கிறார்களாம்..
ஆனாலும், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக, இந்த பஸ்ஸுக்கு பின்னாடி சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளே, இதை வீடியோவாக எடுத்து இணையத்திலும் பதிவிட்டிருக்கிறார்கள்.. இந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது.
பிரேக்: இதனிடையே, போக்குவரத்து துறை உத்தரவையடுத்து, அரசு பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தபடியே உள்ளனர்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சொல்லும்போது, மொத்தம் 312 பஸ் பணிமனைகளிலும் உள்ள பஸ்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக 5 வருடத்தை கடந்துள்ள பஸ்களில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆய்வு முடிந்ததும் அறிக்கையாக தயாரித்து, அரசிடம் அளிக்க உள்ளோம். நீண்ட தூரம் செல்லும் வழித்தட பஸ்களை விட, மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்களில் இயக்கப்படும் பழைய பஸ்கள் இன்னும் ஓரங்கட்டப்படாமல் உள்ளன.
கோரிக்கை: அதுமட்டுமல்லாமல், பராமரிப்பு பணி, உதிரிபொருட்களின் செலவும் அதிகரித்து வருவதால், பழைய பஸ்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவது தான் சரியான வழியாக இருக்கும்.. புதிய பஸ்கள், மின்சார பஸ்கள் வாங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளரிடம் வேண்டுகோள் விடுக்க உள்ளோம்" என்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications