சுத்தி வளைச்சுட்டாங்க.. நாகையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! எல்லாப் பக்கமும் அலசி ஆராயும் எஸ்பி! ஏன்?

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் உள்ளிட்ட சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேர் வருவாய் புலனாய்வு குற்றப்பிரிவு போலீசாரால், மெத்தபெட்டமைன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாகையில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் போலீசார்.

நாகையில் இருந்து இலங்கைக்கு சர்வதேச போதைப்பொருளான மெத்தபெட்டமைன் கடத்துவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வு துறை திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெருவை சேர்ந்த பைனான்சியரான சுகன் என்பவர் வீட்டிற்கு வந்த மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

Nagapattinam

மெத்தபெட்டமைன்

சோதனையின் போது இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடை கொண்ட 27 பாக்கெட்டுகளில் மெத்தபட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 135 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதன் சர்வதேச சந்தை மதிப்பு 135 கோடி என்கின்றனர் அதிகாரிகள். தொடர்ந்து போதைப்பொருள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணைக்கு பிறகு இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட நாகை மாவட்ட தவெக பிரமுகர் வழக்கறிஞருமான பூபாலன் என்பவரை கைது செய்தனர்.

போதைப்பொருள் கடத்தல்

விசாரணையில் பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி சுகன் போன்றவர்கள் மூலம் நாகையிலிருந்து இலங்கைக்கு பல ஆண்டுகளாக போதை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்ட நிலையில் பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறை

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா ஐபிஎஸ், மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தினார்.

கண்காணிப்புப் பணி

முதற்கட்டமாக, அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், கடல் வழியாகவும், மீன்பிடிப் படகுகள் மூலமாகவும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறையினரின் கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.

சோதனை

தொடர்ந்து, நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ரயில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

விசாரணை

இதனைத் தொடர்ந்து, மாவட்ட எல்லையான வாஞ்சூர் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட அவர், அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டார். மேலும், மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் இரவு, பகல் பாராமல் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களைக் கண்காணித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சட்ட நடவடிக்கை

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க நாகை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+